சில்லி பன்னீர் ரெசிபி / CHILLI PANEER RECIPE

Posted in பன்னீர் ரெசிபி

தேவையான பொருட்கள்

பன்னீர்                       –        200 கிராம்

வெங்காயம்                  –        1

குடை மிளகாய்               –        1

பூண்டு                       –        6

இஞ்சி,                       –        2 செ.மீ துண்டு

பச்சை மிளகாய்              –        3

உப்பு                          –        தேவையான அளவு

சர்க்கரை                    –        1 தேக்கரண்டி

அஜினமோட்டோ            –        ஒரு சிட்டிகை (தேவைப்பட்டால்)

டொமாட்டோ கெட்ச் அப்    –        2 மேஜைக்கரண்டி

ரெட் சில்லி சாஸ்          –        1 மேஜைக்கரண்டி

கிரீன் சில்லி சாஸ்         –        1 மேஜைக்கரண்டி

சோயா சாஸ்              -       2 மேஜைக்கரண்டி

வினிகர்                    –        1 தேக்கரண்டி

மிளகாய் தூள்             –        1 மேஜைக்கரண்டி

வெங்காய தாள்            –        ஒரு கைப்பிடியளவு

பொரிக்க

மைதா/ பச்சரிசி            –        3 மேஜைக்கரண்டி

சோள மாவு               –        6 மேஜைக்கரண்டி

உப்பு                        –        தேவைக்கு

சர்க்கரை                  –        ½தேக்கரண்டி

நல்ல மிளகு தூள்         –        2 தேக்கரண்டி

சோயா சாஸ்              –        1 தேக்கரண்டி

நீர்                        –        தேவைக்கு

தேங்காய் எண்ணெய்      –        4 மேஜைக்கரண்டி(பொரிக்க)

செய்முறை

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

பன்னீரை சூடான நீரில் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்

மைதா மற்றும் சோள மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்

நல்ல மிளகு தூள் சேர்க்கவும்

உப்பு மற்றும் சர்க்கரை சேர்க்கவும்

சிறிது சோயா சாஸ் சேர்க்கவும்

தேவையான அளவு நீர் சேர்த்து லேசாக கெடடியான கலவையாக நன்கு பிசையவும்

அதனுடன் பன்னீர் துண்டுகளை சேர்க்கவும்

நன்கு கிளறவும்

கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்

பன்னீர் துண்டுகளை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்

பின்பு அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு தனியே வைக்கவும்

பின்பு ஒரு பத்திரத்தில் டொமாட்டோ கெட்ச் அப் எடுத்துக் கொள்ளவும்

சோயா சாஸ் சேர்க்கவும்

வினிகர் சேர்க்கவும்

கிரீன் சில்லி சாஸ் சேர்க்கவும்

ரெட் சில்லி சாஸ் சேர்க்கவும்

நன்கு கலக்கி தனியே வைக்கவும்

பன்னீர் பொரித்து மீதமுள்ள எண்ணெயை எடுத்துக் கொள்ளவும்

பூண்டு, இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்

சிறிது நேரம் வதக்கவும்

வெங்காயம் மற்றும் குடை மிளகாய் சேர்க்கவும்

சிறிது உப்பு மற்றும் சர்க்கரை சேர்க்கவும் (சாஸ்களில் உப்பு சேர்ந்திருக்கும் எனவே உப்பு மற்றும் சர்க்கரை அதிகமாக சேர்க்க வேண்டாம்)

நன்கு கிளறவும்

மிளகாய் தூள் சேர்க்கவும்

சாஸ் கலவை சேர்க்கவும்

நன்கு கிளறவும்

பின்பு பொரித்த பன்னீர் சேர்க்கவும்

நன்கு கிளறவும்

பின்பு வெங்காயத்தாள் சேர்க்கவும்

 

சில்லி பன்னீர் ரெசிபி ரெடி!!!!!!!!!!

PANEER HEALTH BENEFITS AND MINERALS

.