பட்டர் பனீர் மசாலா / BUTTER PANEER MASALA

Posted in பன்னீர் ரெசிபி


தேவையான பொருட்கள்

வெங்காயம்              -      1/2 கிலோ (பொடியாக நறுக்கியது)

தக்காளி                  -      1/2 கிலோ (துருவியது)

பன்னீர்                   -      1/2 கிலோ

முந்திரி கசகசா

அரைத்த விழுது          -      1/2 கப்

உப்பு                      -      தேவையான அளவு

மஞ்சள்தூள்              -      1 டீஸ்பூன்

மிளகாய் தூள்            -      2 டீஸ்பூன்

கரமசாலா தூள்           -      2 டீஸ்பூன்

தேங்காய் எண்ணெய்     -      1/2 கப்

வெண்ணெய்              -      50 கிராம்

மேலே தூவ              -      க்ரீம் அல்லது பாலாடை விருப்பப்பட்டால்

சீரகம்                    -      2 டீஸ்பூன்

பிரிஞ்சி இலை            -      4

ஏலக்காய் பட்டை                 -

கிராம்பு                    -      சிறிது (வறுத்துப் பொடிக்கவும்).

எப்படிச் செய்வது

அடுப்பில் கடாயை வைத்து வெண்ணெயும் எண்ணெயும் சேர்த்து சூடாக்கவும். சீரகம்பிரிஞ்சி இலை போட்டு தாளிக்கவும் வெங்காயத்தைப்  போட்டு நன்றாக வதக்கவும். கசகசா முந்திரி விழுதைப் போட்டு வதக்கவும். பிறகுதூள் வகைகளைப் போட்டு நன்கு பிரட்டவும். துருவிய தக்காளி  விழுதைப் போட்டுஉப்பை போட்டு கொதி வந்தவுடன் பனீர் துண்டுகளை போடவும். கொதி வந்தவுடன் கீழே இறக்கி ஏலக்காய்பட்டைகிராம்பு  வறுத்துப் பொடித்த பொடியை தூவிகொத்தமல்லியை தூவிப் பரிமாறவும்.

Paneer Health Benefits And Minerals

Onion Health Benefits And Minerals

.