பன்னீர் பக்கோடா / PANEER PAKORA

Posted in பன்னீர் ரெசிபி

தேவையான பொருட்கள்

பன்னீர்                            –        200 கிராம்

தக்காளி சாஸ்                   –        தேவைப்பட்டால்

எண்ணெய்                        –        பொரிக்க

மாவுக்கு

கடலை மாவு                   –        1 கப்

அரிசி மாவு/சோள மாவு      –        ¼ கப்

ஓமம்                             -       ¼ கப்

சாட் மசாலா தூள்             –        2 தேக்கரண்டி

மிளகாய் தூள்                    –        2 தேக்கரண்டி

உப்பு                               –        தேவையான அளவு

நீர்                                –        தேவையான அளவு

செய்முறை

கடலை மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்

அரிசி மாவு அல்லது சோள மாவு சேர்க்கவும்

சிறிது ஒமம் சேர்க்கவும்

சாட் மசாலா தூள் சேர்க்கவும்

மிளகாய் தூள் சேர்க்கவும்

சிறிது உப்பு சேர்க்கவும்

தேவையான அளவு நீர் சேர்த்து சிறிது கெட்டியான கலவையாக நன்கு கலக்கவும்

பன்னீரை எடுத்துக் கொள்ளவும். அதனை படத்தில் உள்ளது போல இரண்டாக வெட்டிக் கொள்ளவும்.


தேவைப்பட்டால் இரண்டு துண்டுகளிலும் சிறிது தக்காளி சாஸ் தடவவும்

பின்பு இரண்டு துண்டுகளையும் சேர்த்து ஒட்டிக் கொள்ளவும்

பின்பு அதனை மாவுக் கலவையில் முக்கி எடுக்கவும்

பின்பு அதனை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

பின்பு அதனை எடுத்து ஒரு பேப்பர் டவ்வலில் வைக்கவும்

பின்பு சூடாக பரிமாறவும்

Paneer Health Benefits And Minerals

.