பன்னீர் கட்லெட் / PANEER CUTLET

Posted in பன்னீர் ரெசிபி

hhudd

தேவையான பொருட்கள்

பன்னீர்                   –        500 கிராம்

மஞ்சள்தூள்             –        1 தேக்கரண்டி

உப்பு                       –        தேவையான அளவு

வெங்காயம்                 –        4

பச்சை மிளகாய்            –        7

கறிவேப்பிலை          –        2 கொத்து

பூண்டு                       –        1 ½மேஜைக்கரண்டி

இஞ்சி                        -       1 ½மேஜைக்கரண்டி

சோம்பு தூள்            –        1 தேக்கரண்டி

கரமசாலா தூள்        –        1½ மேஜைக்கரண்டி

நல்ல மிளகு தூள்    –        1 தேக்கரண்டி

உருளைக்கிழங்கு        -       3

பொரிக்க

சோள மாவு             –        4 மேஜைக்கரண்டி

உப்பு                      –        தேவையான அளவு

பிரட் தூள்               -       1½ கப்

தேங்காய் எண்ணெய்   –        பொரிக்க

செய்முறை

பச்சை மிளகாயை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை வெட்டிக் கொள்ளவும். பூண்டு மற்றும் இஞ்சியை நன்கு நசுக்கி எடுத்துக் கொள்ளவும்.

பின்பு கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கி வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். சிறிது உப்பு சேர்க்கவும்

ஒரு குக்கரில் உருளை கிழங்குடன் நீர் சேர்த்து வேக வைக்கவும்.2 விசில் வரும் வரை வைக்கவும்

வெங்காயம் லேசாக பொன்னிறமாளதும் இஞ்சி பூண்டு கலவையை சேர்க்கவும்

அவை நன்கு வதங்கியதும் சோம்பு, கரம் மசாலா மற்றும் நல்ல மிளகு தூள் சேர்த்து வதக்கவும்

பன்னீரை சிறு துண்டுகளாக வெட்டி கையால் படத்தில் உள்ளது போல் நசுக்கிக் கொள்ளவும்.

பின்பு அதனை வெங்காயக் கலவையுடன் சேர்த்து நன்கு கிளறவும். மீண்டும் 3-4 நிமிடம் வேக வைக்கவும். பின்பு தீயை அணைத்து அதனை ஆற வைக்கவும்

அவை ஆறுவதர்க்குள் உருளைகிழங்கை நன்கு மசித்துக் கொள்ளவும்.

பின்பு பன்னீர் கலவையை உருளைகிழங்குடன் சேர்த்து நன்கு பிசையவும்.

பின்பு அதனை  சிறு சிறு பகுதிகளாக பிரித்து படத்தில் உள்ளது போல் செய்து கொள்ளவும்

பின்பு சோள மாவுடன் 1/2- 3/2 கப் நீர் சேர்த்து கலக்கவும்

கட்லெட்களை சோள மாவுக் கலவையில் முக்கி பின்பு பிரட் தூளில் போட்டு எடுத்து அதனை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

பன்னீர் கட்லெட் ரெடி

Paneer Health Benefits And Minerals

Onion Health Benefits And Minerals

.