பன்னீர் பிரட் ரெசிபி / PANEER BREAD RECIPE

Posted in பன்னீர் ரெசிபி

தேவையான பொருட்கள்:

பன்னீர்                                 -       1 கப்

பிரட்                                    -       3 துண்டுகள்

வேக வைத்த உருளைக்கிழங்கு      -       1/2

வெங்காயம்                          -       1 (பொடியாக நறுக்கியது)

மல்லித்தளை                         -       2 டேபிள் ஸ்பூன்

தக்காளி சாஸ்                        -       1 டேபிள் ஸ்பூன்

ரவை                                  -       1/2 டேபிள் ஸ்பூன்

மஞ்சள்தூள்                          -       1/2 டீஸ்பூன்

உப்பு                                     -       தேவையான அளவு

எண்ணெய்                             -       தேவையான அளவு

செய்முறை:

 

முதலில் பன்னீரை துருவிக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை 5 நிமிடம் நன்கு பிசைய வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் பன்னீரை சேர்த்து, அதில் உருளைக்கிழங்கு மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு பிரட் துண்டுகளைச் சுற்றியுள்ளதை நீக்கிவிட்டு, தண்ணீரில் நனைத்து பிழிந்து பன்னீருடன் சேர்த்து, அத்துடன் மீதமுள்ள பொருட்களையும் சேர்த்து நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும். அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள சிறு உருண்டைகளாக பிடித்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், பன்னீர் பிரட் ரெசிபி ரெடி

Paneer Health Benefits And Minerals

Potatoes health benefits and minerals

.