துவரம் பருப்பு குழம்பு / TURDAL CURRY

Posted in கறி வகைகள்

தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு           -      100 கிராம் (ஊற வைத்து அரைத்தது கொள்ளவும்)

வர மிளகாய்              -      14

சோம்பு                    -      ஒரு ஸ்பூன்

சீரகம்                      -      ஸ்பூன்

உப்பு                       -      தேவைக்கேற்ப

புளி                        -      நெல்லிக்காய் அளவு

மாங்காய் வற்றல்    -      6(வெந்நீரில் ஒரு மணிநேரம் முன்பு ஊற வைத்தது)

மஞ்சள் தூள்             -      ஒரு சிட்டிகை

எண்ணெய்               -      6 ஸ்பூன்

கடுகு                      -      ஒரு ஸ்பூன்

உளுத்தம் பருப்பு       -      ஒரு ஸ்பூன்

சோம்பு                      -     ஸ்பூன்

சின்ன வெங்காயம்    -      50 கிராம் (தோலுரித்து 2 ஆக நறுக்கியது)

பூண்டு                      -      2 பற்கள்(நசுக்கியது)

செய்முறை

புளிஉப்புதண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும். அதில் அரைத்த பருப்புமசாலா ஆகியவற்றை சேர்த்து கரைத்து மஞ்சள் தூள்பூண்டு சேர்த்து கலக்கி விடவும். பின்பு சட்டியில் எண்ணெயைச் சுட வைத்து அதில் கடுகுஉளுத்தம்பருப்புசோம்புமிளகு சேர்த்து தாளிக்கவும். 

அதில் வெங்காயம் போட்டு வதக்கிபின் மாங்காய் வற்றலை தண்ணீர் வடித்து விட்டு அதில் சேர்த்துவதக்கி கரைத்து வைத்துள்ளதை அதில் தூக்கி ஊற்றவும். 

அடுப்பை குறைந்த தணலில் வைத்து அடிக்கடி அடிப்பிடிக்காமல் கிளறிபச்சை வாடை போய் கெட்டியானதும் இறக்கவும்.

அதில் சுண்டை வற்றலை வறுத்துபின் பூண்டு + வெங்காயம் சேர்த்து வதக்கி அரைத்ததையும்பருப்பு அரைத்ததையும் சேர்த்து வதக்கி புளிக்கரைசலை அதில் ஊற்வும். 

நன்கு சுண்டி கெட்டியாகி மேலே எண்ணெய் மிதந்து வரும்போது இறக்கவும். இது 4 அல்லது 5 நாட்களுக்குக் கெடாமல் இருக்கும்.

Mango Health Benefits And Minerals

.