மாங்கொட்டைப் பருப்புக் குழம்பு / MANGO SEED DAL CURRY

Posted in கறி வகைகள்

தேவையானயபொருட்கள்

காய்ந்த மாங்கொட்டைப்

பருப்பு                              -      6 துண்டு (வெந்நீரில் ஊறவைத்து அரைத்துக் கொள்ளவும்)

(முற்றிய மாங்காயில் உள்ள பருப்பை இரண்டாக நறுக்கி உப்பு சேர்த்து காய வைத்தது)

பூண்டு                              -      10 பற்கள் & மெல்லிய துண்டுகளாக நறுக்கியது

சின்ன வெங்காயம்            -      100 கிராம் இரு சிறு துண்டுகளாக நறுக்கியது

கறிவேப்பிலை                  -      ஒரு ஆர்க்

மிளகாய்                         -      10

மல்லி                              -      2 ஸ்பூன்

மிளகு                              -      6

சீரகம்                              -     ஸ்பூன்

புளி                                -      எலுமிச்சை அளவு

உப்பு                            -      தேவைக்கேற்ப

எண்ணெய்                     -      50 மில்லி

சுண்டை வற்றல்               -      15

கடுகு                              -      ஒரு ஸ்பூன்

உளுத்தம் பருப்பு               -      ஒரு ஸ்பூன்

வெந்தயம்                       -      ஸ்பூன்

செய்முறை

புளியை உப்புடன் சேர்த்து கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகுமிளகு 6உளுத்தம்  பருப்புவெந்தயம் கறிவேப்பிலை பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும். 

அதில் சுண்டை வற்றலை வறுத்துபின் பூண்டு + வெங்காயம் சேர்த்து வதக்கி அரைத்ததையும்பருப்பு அரைத்ததையும் சேர்த்து வதக்கி புளிக்கரைசலை அதில் ஊற்வும். 

நன்கு சுண்டி கெட்டியாகி மேலே எண்ணெய் மிதந்து வரும்போது இறக்கவும். இது 4 அல்லது 5 நாட்களுக்குக் கெடாமல் இருக்கும்.

Shallots  Small Onion health benefits and minerals

.