தட்டைப் பயறு குழம்பு (black-eyed beans kulambu)

Posted in கறி வகைகள்

தேவையான பொருட்கள்

தட்டைப்பயறு

(காராமணிப் பயறு)           -      200 கிராம்

மாங்காய் வற்றல்             -      8

அல்லது

முழு மாங்காய்                 -      1

கீரைத் தண்டு                 -      1 நீளத் தண்டு

பெரிய வெங்காயம்         -      1

புளி                              -      எலுமிச்சை அளவு

உப்பு                            -      தேவையானவை

சாம்பார் பொடி              -      2 ஸ்பூன்

தாளிக்க:

கடுகு                           -      ஒரு ஸ்பூன்

சீரகம்                          -      ஸ்பூன்

உளுத்தம் பருப்பு             -      ஒரு ஸ்பூன்

பெருங்காயம்                   -      ஒரு சிட்டிகை

வரமிளகாய்                  -      1

கறிவேப்பிலை               -      ஒரு ஆர்க்

எண்ணெய்                     -      6 ஸ்பூன்

செய்முறை

தட்டைப் பயறை வெறும் வாணலியில் வாசம் வரும் வரை (வெடிக்கும் சத்தம் கேட்கும்) வறுத்து அவித்துக் கொள்ளவும். பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சூடு செய்து தாளிப்பவற்றை போட்டு வெடித்ததும்வெங்காயம் சேர்த்துவதங்கியதும் உப்புபுளியைக் கரைத்து ஊற்றி சாம்பார் பொடி சேர்க்கவும். 

கீரைத் தண்டை தனியாக நீளவாட்டில் துண்டுகளாக நறுக்கி அவித்து தண்ணீரை இறுத்துவிட்டுகுழம்பில் சேர்க்கவும். மாங்காய் வற்றலை ஒரு மணி நேரம் முன்பே வெந்நீரில் ஊற வைத்துக் கொண்டு பின் எடுத்துக் குழம்பில் சேர்க்கவும். பயறைஅவித்த நீருடன் குழம்பில் சேர்க்கவும். 

மாங்காயாக இருந்தால் தோலுடன் நீளத் துண்டுகளாக நறுக்கிகுழம்பை இறக்குவதற்கு 5 நிமிடம் முன்பு சேர்த்துவெந்துகுழம்பு கெட்டியானதும் இறக்கி விடவும்.

Mango Health Benefits And Minerals

.