மரவள்ளிக் கிழங்கு புட்டு / CASSAVA TUBER PUTTU

Posted in மரவள்ளி கிழங்கு ரெசிபி

தேவையான பொருட்கள்

மரவள்ளிக் கிழங்கு   -       1 கிலோ

தேங்காய்             –        1½  (துருவியது)

உப்பு                    –        தேவையான அளவு

செய்முறை

மரவள்ளிக் கிழங்கை எடுத்துக் கொள்ளவும்

மரவள்ளிக் கிழங்கை தோலுரித்துக் கொள்ளவும்

நீளமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்

பின்பு அதனை துருவிக் கொள்ளவும்

சிறிது உப்பு சேர்க்கவும்

நன்கு கலக்கவும்

 

 

பின்பு துருவிய கிழங்கை பிழிந்து சாறினை நீக்கி விடவும்

பின்பு புட்டு குழலை எடுத்துக் கொள்ளவும்

அதன் அடித் தட்டை வைக்கவும்

புட்டு குடத்தில் நீர் நிரப்பி புட்டு குழலை அதன் மேல் வைக்கவும்

சிறிது தேங்காயை புட்டு குழலினுள் போடவும்

அதன் மேல் துருவிய கிழங்கை போடவும்

இரண்டையும் மாறிமாறி வைக்கவும்

இறுதியாக தேங்காயை போட்டு அதன் மூடியால் மூடி விடவும்

பின்பு அதனை வேக வைக்கவும்

புட்டு வெந்ததும் அதன் அடிப்பகுதியினை ஒரு குச்சியால் குத்தி வெளியே எடுக்கவும்

மரவள்ளிக் கிழங்கு புட்டு ரெடி!!!!!!!!!!!!!!

.