மாங்காய் பச்சடி / MANGO PACHADI

Posted in மாங்காய் ரெசிபி

தேவையான பொருட்கள்

பச்சை மாங்காய்      –        1/2 கப்

தேங்காய்             -       1/2 கப் (துருவியது)

இஞ்சி                –        3/4 இன்ஞ் துண்டு

ஜீரகம்                –        1/2 தேக்கரண்டி

உழுத்தம் பருப்பு      –        2 தேக்கரண்டி

பச்சை மிளகாய்      –        2

உப்பு                 –        தேவையான அளவு

எண்ணெய்           –        1 தேக்கரண்டி

தாளிக்க

கறி வேப்பிலை      –        1 கொத்து

வத்தல் மிளகாய்     –        1/2

கடுகு                –        ஒரு சிட்டிகை

ஜீரகம்               –        1/4 தேக்கரண்டி

பெருங்காயம்        –        ஒரு சிட்டிகை

செய்முறை

மாங்காயை நன்கு கழுவி தோலுரித்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். பின்பு உழுத்தம் பருப்பு மற்றும் ஜீரகம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்

மிக்சியில் இஞ்சி, மாங்காய், தேங்காய், உப்பு மற்றும் வதக்கிய பச்சை மிளகாய், உழுத்தம் பருப்பு, ஜீரகம் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும்

தேவையான அளவு நீர் சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ளவும்

பானில் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்.

அதனை பச்சடியுடன் சேர்க்கவும். மாங்காய் பச்சடி ரெடி!!!!!!

.