• Screenshot_3.png - 979.39 KB
  • IMG_8984-Copy1.jpg - 232.79 KB
  • food.JPG - 276.29 KB

English Category

ஃப்ரை வெஜ் ப்ரைட் ரைஸ் / Fry Veg Fry Rice

Posted in சாதம் வகைகள்

sunsamayal.com Fry Veg Fry Rice

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி                :           1 கப்

முட்டை கோஸ்            :           1/4 கிலோ (பொடியதாக நறுக்கவும்)

காரட்                              :           1 (பொடியதாக நறுக்கவும்)

வெங்காயத் தாள்        :           5 (பொடியதாக நறுக்கவும்)

குடை மிளகாய்          :           1 (சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்)

வெங்காயம்                 :           1 சிறியது ( நீளவாக்கில் நறுக்கியது)

பீன்ஸ்                         :           10 (பொடியதாக நறுக்கியது)

மிளகு தூள்                 :           சிறிதளவு

சோயா சாஸ்              :           2 தே. கரண்டி

அஜினமோட்டோ         :           1 1/2 தே. கரண்டி

உப்பு                            :           தேவையான அளவு

எண்ணெய்                    :           1/4 கப்

முட்டை                      :           2

செய்முறை

*பாசுமதி அரிசியை நன்கு களைந்து ஒரு தே. கரண்டி எண்ணையுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிடவும்.

*வெந்த பின் வாயகன்ற பாத்திரத்தில் கொட்டி நன்றாக ஆற விடவும்.உதிரி உதிரியாக இருக்க வேண்டும். முக்கால் பாகம் வெந்தால் போதும்.(முதல் நாளே செய்து ப்ரிட்ஜிலும் வைத்து விடலாம்)

*முட்டையில் 2 தே.கரண்டி எண்ணைஉப்புமிளகு தூள் சேர்த்து பொரித்து தனியாக வைக்கவும்.

*கனமான பாத்திரத்தில் சிறிது எண்ணை விட்டு வெங்காயம்,முட்டைகோஸ்கேரட்வெங்காயத்தாள்,குடைமிளகாய்,பீன்ஸ் ஆகியவற்றை போட்டு வதக்கி மூடி வைக்கவும். (தண்ணீர் விடக்கூடாது).

*சிறிது நேரத்திற்கு பின் சோயா சாஸ்அஜினமோட்டோஉப்பு இவற்றை சேர்த்து கிளறி உடன் சாதத்தையும் போட்டு கிளற மூடி வைக்கவும்.

*.சிறிது நேரத்திற்கு பின் பொரித்த முட்டையை போட்டு கிளரி விடவும்.

 *சுவையான ஃப்ரை வெஜ் ப்ரைட் ரைஸ் ரெடி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

 Beans Health Benefits And Minerals

Cabbage Health Benefits And Minerals

Carrot Health Benefits And Minerals

Tamil Category

.