• Screenshot_3.png - 979.39 KB
  • IMG_8984-Copy1.jpg - 232.79 KB
  • food.JPG - 276.29 KB

ஓட்ஸ் கிச்சடி / OATS KICHADI

Posted in சர்க்கரை நோயாளிகளுக்கு

தேவையான பொருட்கள்

பாசிப் பருப்பு                 –       1/4 கப்

ஓட்ஸ்                       –       1/2 கப்

ஜீரகம்                       –       1/2 தேக்கரண்டி

இஞ்சி                       –       1/2 தேக்கரண்டி

நீர்                           –       2 கப்

உப்பு                         –       தேவையான அளவு

நெய்                         –       தேவையான அளவு

மஞ்சள் தூள்                –       ஒரு சிட்டிகை

பெருங்காயம்                –       ஒரு சிட்டிகை

செய்முறை

பருப்பை நன்கு கழுவி சிறிது நேரம் ஊற வைக்கவும்.

 

பிரஷர் குக்கரில் எண்ணெய் விட்டு சூடாக்கவும். ஜீரகத்தை தாளிக்கவும். இஞ்சி சேர்த்து பச்சை வாசம் போகும்வரை வதக்கவும். பெருங்காயம் சேர்க்கவும்.

 

நறுக்கிய காய்கள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கவும்.

பின்பு பாசிப் பருப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கவும். விரும்பினால் மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்க்கவும். சிறிது நெய் சேர்த்து நறுமணம் வரும் வரை வதக்கவும்.

பின்பு ஓட்ஸ் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.

நீர் சேர்த்து நன்கு கிளறவும்.

பின்பு குக்கரை மூடி வைத்து மிதமான தீயில் 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

ஓட்ஸ் கிச்சடி ரெடி!!!!!!!!

.