தினமும் உணவில் சிறிது நெய் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

Posted in மருத்துவம்

உடல் ஆரோக்கியம் மீது அதிக அக்கறை கொண்டவர்கள், உண்ணும் உணவில் எண்ணெய்,

நெய் போன்றவற்றை சேர்க்கமாட்டார்கள். அப்படி சேர்க்காமல் இருந்தால், உடலுக்கு வேண்டிய ஒருசில முக்கிய சத்துக்கள் கிடைக்காமல் போய்விடும். அதிலும் நெய் சேர்க்காமல் இருப்பது மிகவும் தவறு.

ஏனெனில் நெய்யில் ஊட்டச்சத்துக்களானது வளமாக நிறைந்திருப்பதால், அதனை அன்றாட உணவில் சிறிது சேர்த்து வருவதன் மூலம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம். இங்கு தினமும் உணவில் சிறிது நெய் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

ஞாபக மறதியைத் தடுக்கும் நிபுணர்களின் கருத்துப்படி நெய்யை அன்றாடம் சிறிது சேர்த்து வருவது நரம்பு மற்றும் மூளைக்கு நல்லதாம். ஏனெனில் மூளையில் ஒமேகா-6 ஃபேட்டி ஆசிட் மற்றும ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் வளமாக நிறைந்துள்ளது.

இந்த சத்துக்களின் அளவு உடலில் குறையும் போது, ஞாபக மறதி வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே தினமும் இதனை சிறிது சேர்த்து வந்தால், மூளையின் செயல்பாடு சீராக இருக்கும்.

புற்றுநோயைத் தடுக்கும் நெய்யில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகம் உள்ளது. மேலும் இதனை சூடேற்றும் போது ப்ரீ ராடிக்கல்களை குறைவாக உற்பத்தி செய்வதால், புற்றுநோய் வரும் அபாயம் குறையும். நெய்யில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருப்பதால், அவை நல்ல பாதுகாப்பு தரும்.

செரிமானம் மேம்படும் நெய் செரிமான அமிலத்தை சுரக்க உதவிபுரியும். மேலும் இந்திய உணவுகளில் எளிதில் செரிமானமாக உணவுகளில் நெய் சேர்க்கப்படுவதற்கு முக்கிய காரணமும் இது தான் என்றும் சொல்லலாம். எனவே செரிமான சீராக நடைபெற தினமும் உணவில் சிறிது நெய் சேர்த்துக் கொள்ளுங்கள்.,

கொழுப்புக்களை கரைக்கும் உங்கள் உடலில் ஆங்காங்கு கொழுப்புக்கள் தேங்கியிருந்தால், தினமும் உணவில் நெய் சேர்த்து வாருங்கள். ஏனெனில் நெய்யில் உள்ள அமினோ அமிலங்கள், கொழுப்புக்களை கரைப்பதோடு, கொழுப்பு செல்களை சுருங்கவும் செய்வதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

மூட்டு வலிகள் மூட்டு வலியால் அவஸ்தைப்படுபவர்கள், தினமும் டயட்டில் சிறிது நெய் சேர்த்து வந்தால், மூட்டு வலி வருவது குறையும்.

நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக்கும் நெய்யில் உள்ள ஆன்டி-வைரல் மற்றும் பூஞ்சையெதிர்ப்பு பொருள், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும்.

எவ்வளவு நெய் சாப்பிடுவது நல்லது? தினமும் 2 டீஸ்பூன் நெய்யை உணவில் சேர்த்து வருவது நல்லது. அதைவிட்டு அளவுக்கு அதிகமானால், அது உடலில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து, இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

 

.