பின்னனி இசை இல்லாமல் விசாரணை வெளியிடூ!

Posted in பொன்மொழிகள்

சென்னை செப்டம்பர் 9- தேசிய விருது திரைப்படமான ஆடுகளம் படத்திற்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கும் படம் விசாரணை.இப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ்,கயல்

ஆனந்தி,சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ளனர். 

இப்படம் கோயம்புத்தூரை சேர்ந்த ஆட்டோ டிரைவரின் சுயசரிதையை புத்தகமாக தொகுத்து வெளிவந்த ‘லாக்கப்’ என்ற புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.இந்தப் படம் திரைக்கு வருவதற்கு முன்பே, வெனீஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே, இப்படத்தை பின்னனி இசை ஏதும் இல்லாமல் வெளியிட வெற்றிமாறன் முடிவு செய்துள்ளார்.டப்பிங் மற்றும் சில சவுண்ட் எபெக்ட்ஸுகளை மட்டும் பயன்படுத்தி புதுவிதமாக  இப்படத்தை வெளியிடப் போவதாகவும் கூறப்படுகிறது.

 

 

 

 

.