காதலிக்கப் போகிறீர்களா?

Posted in பொன்மொழிகள்

lover2.jpg - 2.74 KB

இளம் வயதில் பதின்ம வயதுப் பருவம் காதலுக்கான முதல் பருவம். இந்த வயதில்தான் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான காதல் துவங்குகிறது. காதலிக்க விரும்புபவர்களுக்காக மட்டுமல்ல, காதலைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்காகவும் காதலைப் பற்றி சிலரின் கருத்துக்கள் இங்கே தொகுத்துத் தரப்பட்டுள்ளது.

  • காதல் - இருமல் - புகை - பணம் ஆகியவைகளை நீண்ட காலம் மறைக்க முடியாது. - பாரசீகப் பழமொழி
  • சாதாரணப் பெண்களுக்குத்தான் காதலைப் பற்றித் தெரியும். அழகான பெண்களுக்குத் தங்கள் அழகைப் பற்றிய சிந்தனைதான் இருக்கும். - காத்தரின் ஹெப்பர்ன்
  • காதலின் எதிர்ப்பதம் வெறுப்பு அல்ல அறியாமை. - பிரயன் வாங்
  • காதலும், குருட்டுத்தனமும் இரட்டைச் சகோதரிகள் -ரஷ்யப் பழமொழி
  • ஒருவனுக்குக் காதல் என்பது நிராகரிக்கப்பட்டு விட்டால் பணம் அந்த இடத்தைப் பிடித்துக்கொள்கிறது. - டி.ஹெச். லாரன்ஸ்
  • பெண்ணின் காது வழியாகவும், ஆணின் கண் வழியாகவும் காதல் முதலில் நுழைகிறது. -போலந்து பழமொழி
  • காதல் என்பது ஒருவித தற்காலிக மனநோய். திருமணம் செய்தால் குணமாகிவிடும். - ஆம்புரோஸ் பியர்ஸ்
  • காதல் மணல் கடிகாரம் போல. நெஞ்சு நிரம்ப நிரம்ப மூளை காலியாகிறது. - ஜூல் ரெனா
  • காதலிக்காமலே இருப்பதை விட காதலித்துத் தோல்வியடைவது மேல். - ஆல்ஃப்ரெட் டென்னிசன்
  • காதலைப் பற்றி நன்றாகத் தெரிந்தவர்கள் காதலிக்க மாட்டார்கள். - டக்ளஸ் யேட்ஸ்
  • காதல் காலத்தை மறக்கச் செய்யும். காலம் காதலை மறக்கச் செய்யும். - யாரோ
  • காதல் நோய்க்கு மருத்துவன் இல்லை. -ஆப்பிரிக்கப் பழமொழி
  • கடவுள் மனிதனுக்கு நெருப்பைக் கொடுத்தான் மனிதன் தீயணைப்புக் கருவிகளைக் கண்டுபிடித்தான். கடவுள் மனிதனுக்குக் காதலைக் கொடுத்தான் மனிதன் திருமணத்தைக் கண்டுபிடித்தான். - யாரோ
  • விவேகம் மிக்கவர்களுக்கு அதிபதி காதல்: அதை மீறுபவர்கள் அறிவில்லாதவர்கள். -வில்லியம் தாக்கரே.
  • இன்பத்தின் இனியதும் துன்பத்தின் கொடியதும் காதலே. -பெய்லி
  • காதலிக்காமலே இருப்பதை விட, காதலித்து தோல்வி காண்பதே மேல். -டென்னிசன்
  • சூரியன் மறையலாம்; ஆனால், நிலையான காதல் மறைவதில்லை. -ஊட்
  • உண்மை காதல் அனைத்துக்கும் பரஸ்பர மதிப்பே அடிப்படை. -ஜார்ஜ்
  • காதலே, காதலின் வெகுமதி. -ஜான் டிரைடன்.
  • காதல் - தன்னைத் தானே அளிப்பது; விலை கொடுத்து அதை வாங்குவதில்லை. -லாங்பெல்லோ.
  • காதல் பேச முற்பட்டு விட்டால், ஊமை கூட புரிந்து கொள்வான். -ஸ்லிப்ட்
  • உண்மையான காதல், எண்ணத்திலே மலர்ந்து உள்ளத்திலே இடத்தை தேடிக்கொள்ளும். -கர்னிலியஸ் நீல்.
  • காதலால் வீரனானோர் சிலர். மூடரானோர் பலர் -சுவீடன் பழமொழி
  • உலகை வலம் வரவும், சுற்றி வரவும் செய்வது காதல். -மார்லோ
  • ஆணின் காதல், வாழ்க்கையில் ஓர் அங்கம்; பெண்ணின் காதலோ அவளது முழு வாழ்வும். -பைரன்
  • காதல் ஒரு கண்ணாடி குவளை; இறுக்கமாக பிடித்தால், உடைந்து விடும்; மெதுவாக பிடித்தால், கை நழுவி உடைந்து விடும். -ஜெரோம்.
  • உண்மையான காதல் ஒரு தணியாத வேட்கை, இனிமையான தொடர்கதை, அணையா தீ. - ஆபின்டன்
  • காதல் என்பது கருகிவிடும் சாதாரண மலர் அல்ல. அதன் விதைகள் சொர்க்கத்தில் இருந்து வருவது; எப்பொழுதுமே வாடாத மலர் அது. -லோவில்
  • யுகமெல்லாமே உழைத்து சாதிக்க இயலாத்தை நொடிப்பொழுதில் அளிக்கிறது காதல். -கதே
  • அசடனையும் அறிவுக் கூர்மை உள்ளவனாய் மாற்றி விடும் காதல். -சார்லஸ் டிப்டின்.
  • தெய்வத்தின் தலைசிறந்த அன்பளிப்பே காதல். -கேபிள்
  • போர் வாளின்றி தன் ராஜ்ஜியத்தை ஆள்வது காதல். -ஹெர்பர்ட்.
  • காதலிக்கும் போது புத்திசாலிக்கும் முட்டாளுக்கும் இடையில் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது. - யாரோ
.