படபிடிப்பிற்காக ஒரு மாதம் ஐரோப்பாவில் தங்க உள்ள விஜய்..!

Posted in சினிமா செய்திகள்

”விஜய் 61” படத்தின் படப்பிடிப்பானது வரும் மே மாதம் முழுவதும் ஐரோப்பாவில் நடைபெற உள்ளது.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் 'விஜய் 61' படத்தின் படப்பிடிப்பானது தற்போது சென்னையிலுள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் நடைபெற்று வருகிறது. இதில் விஜயின் பிளாஷ்பேக் குறித்த காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து விஜய் 61 படத்தின் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு, வரும் மே மாதம் முழுவதும் ஐரோப்பிய நாடுகளில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனை சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் அட்லீ உறுதி செய்தார். ஐரோப்பிய நாடுகளில் நடைபெற உள்ள படப்பிடிப்பில், விஜய் 61 படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக அட்லீ தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் அமெரிக்காவில்தான் விஜய் 61 படத்தின் படப்பிடிப்பு நடைபெறுவதாக இருந்தது. ஆனால் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின்னர், இந்திய விசாக்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளுக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

.