“படையப்பா” நீலாம்பரியை மிஞ்சிய “பாகுபலி” சிவகாமி!

Posted in சினிமா செய்திகள்

படையப்பா நீலாம்பரிக்கு பிறகு அத்தனை வலுவான கேரக்டர் இனி அமையாது என்றுநினைத்திருந்த நிலையில் பாகுபலி

சிவகாமி கேரக்டர் அமைந்தது மிகவும் மகிழ்ச்சி என நடிகை ரம்யா கிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மிகப்பெரும் எதிர்பார்ப்பு என்றால் அது பாகுபலி என்பது மிகையல்ல. அந்த அளவிற்கு பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ள பாகுபலி படம் எல்லோர் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் பல திரை நட்சத்திரங்கள் பங்கேற்ற விமர்சையாக நடைபெற்றது. படத்தின் நட்சத்திரங்கள் அனைவரும் அதில் கலந்து கொண்டனர். பாகுபலி படத்தில் மிக முக்கிய கதாப்பாத்திரம் ஏற்று நடித்துள்ள நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது சிவகாமி கதாப்பாத்திரம் குறித்து பெருமையுடன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

.