சதுரங்க வேட்டை நட்ராஜ்க்கு ஜோடியாகும் ராய் லட்சுமி!

Posted in சினிமா செய்திகள்

மிளகா படத்தில் நாயகனாக நடித்தவர் ஒளிப்பதிவாளர் நட்டி என்கிற நட்ராஜ். அதன்பிறகு ராசுமதுரவன் இயக்கிய முத்துக்கு முத்தாக படத்தில் மூன்று

ஹீரோக்களில் ஒருவராக நடித்தவர், பின்னர் சதுரங்க வேட்டை, கதம் கதம் ஆகிய படங்களிலும் நடித்தார். இதில் சதுரங்க வேட்டை சூப்பர் ஹிட்டானது. ஆனபோதும் தொடர்ந்து நடிக்காமல் ஒளிப்பதிவு செய்வதிலேயே கூடுதல் கவனம் செலுத்தினார் நட்ராஜ். அந்த வகையில், சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான புலி படத்துக்கும் அவர்தான் ஒளிப்பதிவு செய்தார். 

இந்த நிலையில், அடுத்தபடியாக தாஜ் என்ற புதுமுக இயக்குனரின் படத்தில் நடிக்கிறாராம் நட்ராஜ். இந்த படத்தின் கதையும் கிட்டத்தட்ட சதுரங்க வேட்டை போன்று விறுவிறுப்பான திரைக்கதையாம். அதனால் கதையின் மீது முழு நம்பிக்கை வைத்து மீண்டும் நாயகனாக அரிதாரம் பூசுகிறாராம் நட்டி. 

 

மேலும், தனக்கு பெரிய கமர்சியல் வேல்யூ இல்லை என்பதால், கதாநாயகியாக யாராவது முன்னணி நடிகைகளை நடிக்க வைக்க வேண்டும் என்று முடி வெடுத்த நட்டி, சில நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி இப்போது ராய் லட்சுமியிடம் சம்மதம் வாங்கியிருக்கிறாராம். தற்போது ஏ.ஆர்.முருகதாஸின் அகிரா படத்திற்காக மும்பையில் முகாமிட்டுள்ள ராய்லட்சுமி, டிசம்பர் மாதம் சென்னை வந்து நட்டியுடன் டூயட் பாடப்போகிறாராம்.

.