அதிகரிக்கப்பட்ட தியேட்டர்களில் கத்துக்குட்டி...!

Posted in சினிமா செய்திகள்

பத்திரிகையாளராக இருந்து சினிமா இயக்குநரானவர்களில் கவனத்தை ஈர்த்தவராகி இருக்கிறார் கத்துக்குட்டி பட இயக்குநர் இரா.சரவணன். சமீபத்தில் வெளியான

திரைப்படங்களில் பல தரப்பினரையும் கவர்ந்த படம் என்ற பெயரைப் பெற்றுள்ளது - கத்துக்குட்டி. தலைப்பைப் பார்த்தால் வெறும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த காமெடிப் படம் போல் தோன்றினாலும், டெல்டா பகுதி மக்களின் வாழ்வை சூறையாடத் துடிக்கும் மீத்தேன் திட்டத்தின் விபரீத விளைவுகள் பற்றியும் கத்துக்குட்டி படம் பேசியது. அதோடு விவசாயிகளின் பிரச்சனை குறித்தும் விவாதித்தது. 

 

பொழுதுபோக்கு அம்சங்களுடன் நல்ல கருத்தையும் சொன்னதால், ஒருபக்கம் திரைப்படம் என்பது பொழுதுபோக்கு என்று சொல்கிறவர்களையும், இன்னொரு பக்கம், திரைப்படம் என்பது மக்களின் பிரச்சனைகளைப் பேச வேண்டும் என்று எண்ணுகிறவர்களை திருப்தி படுத்தி இருக்கிறது கத்துக்குட்டி. சமூகப்பொறுப்பு சற்றும் குறையாமல் உருவாக்கப்பட்ட கத்துக்குட்டி படத்தை மிகச் சரியாய் இனம் கொண்டு மக்களும் அங்கீகரித்துள்ளனர். அதன் காரணமாக தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. கடந்த 9 ஆம் தேதி அன்று சுமார் 180 தியேட்டர்களின் வெளியான கத்துக்குட்டி படம் தற்போது 25 தியேட்டர்களில் கூடுதலாக திரையிடப்பட்டிருக்கிறது.

.