நானும் ரௌடிதான் படத்துக்கு யு சான்றிதழ் இல்லை

Posted in சினிமா செய்திகள்

தனுஷின் 'வுண்டர்பார் ஃபிலிம்ஸ்' நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய்சேதுபதி, நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள 'நானும் ரௌடிதான்' படம் வருகிற 21-ஆம் தேதி

ரிலீசாகவிருக்கிறது. 'போடா போடி' இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படம் நேற்று தணிக்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளனர். யுஏ சான்றிதழ் கிடைத்தால் படத்துக்கு வரிவிலக்கு கிடைக்காது என்பதால் எப்படியாவது யு சான்றிதழை வாங்க தணிக்கை அதிகாரியிடம் இயக்குநர் தரப்பிலிருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டதாம். 

நானும் ரெளடிதான் என்ற படத்தலைப்பில் உள்ள ரெளடி என்ற வார்த்தை தமிழ் இல்லை ஹிந்தி வார்த்தை என்பதால் அதையே காரணம் காட்டி யு வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்துவிட்டனர். யு சான்றிதழ் கிடைக்கவில்லை என்றால் 30 சதவிகிதம் வரி செலுத்த வேண்டும். எனவே லாபத்தில் 30 சதவிகிதம் நஷ்டமாகும் என்பதால் நானும் ரௌடிதான் படத்தை வாங்கிய லைகா நிறுவனம் அப்ஸெட்டாகிவிட்டதாம். 

 

இப்படத்தின் மதுரை, சேலம் விநியோக உரிமையை வாங்கியிருந்தார் 'கோபுரம் ஃபிலிம்ஸ்' அன்பு செழியன். நானும் ரௌடிதான் படத்துக்கு வரிவிலக்கு கிடைக்காது என்பதால் ஏற்கனவே பேசிய தொகையில் சில கோடிகளை குறைத்துக் கொள்ளும்படி லைகாவிடம் கேட்டிருக்கிறாராம்.

.