போலி மானேஜருக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் வைத்த செக்

Posted in சினிமா செய்திகள்

விஜய்சேதுபதி உடன் ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், தேசிய விருது பெற்ற "காக்கா முட்டை" படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை

கவர்ந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது குஷ்புவின் "அவ்னி சினிமேக்ஸ்" நிறுவனம் தயாரிக்கும் "ஹலோ நான் பேய் பேசுறேன்" படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துள்ள நிலையில், அடுத்து உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயன்ட் மூவீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், என்றென்றும் புன்னகை அகமது இயக்கும் புதிய படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். 

"ஈரம்" படத்தை இயக்கிய அறிவழகன் இயக்கத்தில் அருள்நிதியின் ஜோடியாக "ஆறாது சினம்" படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவை தவிர இரண்டு புதிய படங்களில் நடிக்க உள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது நடிகர் ஜீவாவின் பி.ஆர்.ஓ.வான யுவராஜை தன் மானேஜராக நியமித்துள்ளார். இந்த தகவலை ஊடகங்களுக்கு செய்தியாகவும் அனுப்பி வைத்திருக்கிறார். 

 

மானேஜர் நியமனத்தை எல்லாம் ஊடகங்களுக்கு சொல்லணுமா என்ன? ஆசாமி ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நான்தான் மானேஜர் என்று சொல்லிக் கொண்டு திரையுலகத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறாராம். இதே நபர் வரலட்சுமி சரத்குமாருக்கும் நான்தான் மானேஜர் என்று சொல்லி வருவதோடு, பல நடிகைகளின் பெயரை பயன்படுத்தி வந்திருக்கிறார். யாரோ ஒரு ஆசாமி தன் பெயரை கெடுத்து வருவதோடு மற்றவர்களை ஏமாற்றி வருவதையும் கேள்விப்பட்ட ஐஸ்வர்யா ராஜேஷ் உடனே உஷாராகி, தன் மானேஜர் பெயரை அறிவித்தாராம்.

.