சிம்புதேவனுக்கு 2 கோடி சம்பளம்.?

Posted in சினிமா செய்திகள்

விஜய், ஸ்ருதிஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான புலி படம் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தாலும் இதுவரை படத்தின் வசூல் குறையவில்லை என்று

தயாரிப்பாளர் தரப்பில் சொல்கிறார்கள். சென்னையில் உள்ள ஐநாக்ஸ் போன்ற மல்ட்டிப்ளக்ஸ் தியேட்டர்களில் 3 ஸ்கிரீன்களில் புலி படத்தை ரிலீஸ் செய்தனர். இன்றுவரை அதே 3 ஸ்கிரீன்களில் புலி படம் ஓடிக்கொண்டிருப்பதை சுட்டிக்காட்டுகிறார்கள். அதே சமயம் பல தியேட்டர்களில் கூட்டம் குறைந்துவிட்டதையும் பார்க்க முடிகிறது. இதனால் படத்தின் வசூலும் குறைந்திருக்க வாய்ப்புள்ளது. 

 

ஒருவேளை வசூல் குறையவில்லை என்று வைத்துக்கொண்டாலும் புலி படம் பிசினஸ் செய்யப்பட்ட தொகைக்கு இன்னும் 3 வாரங்கள் ஹவுஸ்புல்லாக ஓட வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் கணக்கு சொல்கின்றனர். இதற்கிடையில் புலி படம் இயக்க சிம்புதேவனுக்கு 2 கோடி மட்டுமே சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது என்று திரையுலகில் முணுமுணுப்பு கேட்கிறது.

.