நயன்தாராவை வேண்டாம் என்று மறுத்த விஜய்?

Posted in சினிமா செய்திகள்

புலி படத்தை அடுத்து தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய். கலைப்புலி தாணு தயாரிக்கும் இந்தப் படத்தை அடுத்து எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில்

நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் விஜய். தற்போது அஜித்தை வைத்து வேதாளம் படத்தைத் தயாரித்து வரும் ஏ.எம்.ரத்னம் அப்படத்தை அடுத்து விஜய் நடிக்கும் படத்தைத் தயாரிக்க உள்ளார். 

 

இந்தப் படத்துக்கு கதாநாயகி யார் என்று ஆலோசனை நடத்தியபோது தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னமும், இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவும் நயன்தாராவை கமிட் பண்ணலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். நயன்தாராவை கதாநாயகியாகப் போடலாம் என்ற தகவல் விஜய்யிடம் சொல்லப்பட்டபோது, ஒரு கணம் கூட யோசிக்காமல், நயன்தாரா வேண்டாம்.. வேற நடிகையைப் பாருங்க என்று சொல்லிவிட்டாராம்.

.