அஜித் பிரியாணியை மறுத்த ஸ்ருதி

Posted in சினிமா செய்திகள்

அஜித் நடிகர் மட்டுமல்ல சிறந்த சமையல்கலை வல்லுனரும் கூட என்பது நாட்டு மக்கள் அனைவரும் அறிந்த செய்திதான். தானே விதம்விதமாக பிரியாணி

சமைப்பதோடு, அதை தன் படங்களில் பணிபுரிபவர்களுக்கு விருந்து கொடுப்பார். அஜித் சமைத்த பிரியாணியை விஜய் உட்பட பலர் சுவைத்துள்ளனர். தற்போது வேதாளம் படத்தில் நடித்து வரும் அஜித், தன்னுடன் நடித்து வரும் கலைஞர்களுக்கு பிரியாணி விருந்து கொடுக்க விரும்பி, யார் எல்லாம் பிரியாணி சாப்பிட ஆர்வம் காட்டுகிறார்கள் என்று கேட்டிருக்கிறார். 

வேதாளம் படக்குழுவினர் அனைவரும் அஜித்தின் பிரியாணியை சாப்பிட ஆர்வம் காட்ட, படத்தின் நாயகியான ஸ்ருதிஹாசன் மட்டும் தனக்கு பிரியாணி வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். தான் பிராமணப்பெண்ணாக இருந்தாலும் நான்வெஜ் எல்லாம் சாப்பிடுவேன்.. ஆனால் இப்போது டயட்டில் இருக்கிறேன். அதனால் பிரியாணி வேண்டாம் என்று ஸ்ருதிஹாசன் சொல்லி இருக்கிறார். 

 

அவர் சொன்னதைக் கேட்ட அஜித் கொஞ்சம் கூட வருத்தப்படவில்லையாம். மற்ற அனைவருக்கும் பிரியாணி விருந்து வைப்பதாக தெரிவித்துள்ளார். அஜித்தின் பிரியாணியை வேண்டாம் என்று சொன்ன ஸ்ருதிஹாசன், நல்லவேளை மீகாமன் படத்தில் ஆர்யா உடன் நடிக்கவில்லை.அந்தப்படத்தில் நடிக்க முதலில் ஒப்புக்கொண்ட ஸ்ருதிஹாசன் பிறகு நடிக்க மறுத்துவிட்டார். ஒருவேளை நடித்திருந்தால் நிச்சயமாக பிரியாணி கொடுத்திருப்பார்.

.