10 கோடி ஹிட்ஸ்களைத் தொடப் போகும் 'கொல வெறி'

Posted in சினிமா செய்திகள்

தமிழ் சினிமாவில் இன்றைய யு டியூப் ஹிட்ஸ்களுக்கெல்லாம் முதல்வர்களாக விளங்கியது அனிருத்தும், தனுஷும்தான். சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பு '3'

படத்தில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாவதற்கு முன் அந்தப் படத்தில் இடம் பெற்ற 'கொல வெறி' பாடலை யு டியூபில் தனுஷும், அனிருத்தும் பதிவேற்றினார்கள். அது அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக பற்றிக் கொண்டு வைரலாகப் பரவியது. மாநிலம் கடந்து, நாடு கடந்து உலகம் முழுவதும் உள்ள இசை ரசிகர்களை அந்தப் பாடலும் பாடல் வரிகளும் வெகுவாக ஈர்த்தது. அன்றிலிருந்து இன்று வரை அந்தப் பாடல் அதே புகழுடன் இருந்து கொண்டுதானிருக்கிறது. தமிழ் சினிமாவில் ஏன் இந்திய சினிமாவில் கூட, இன்றைய பல யு டியூப் சாதனைகள் 'கொல வெறி' அருகில் கூட போக முடியாத அளவிற்கே உள்ளன. 

இதுவரை சுமார் 9,83,10,157 பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ள இந்த வீடியோவை இன்னும் 17 லட்சம் பேர் பார்த்தால் 10 கோடி பார்வையாளர்களை ஈர்த்த ஒரு வீடியோவாக சாதனை புரிந்துவிடும். இந்தியாவைச் சேர்ந்த ஒரு வீடியோ யு டியூபில் அதிகம் பார்க்கப்பட்ட சாதனையைப் பெற்றுள்ள 'கொலைவெறி' வீடியோ விரைவில் 10 கோடி பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வீடியோவை 3,67,428 பேர் இதுவரை லைக் செய்துள்ளனர். 

 

ஒரு தமிழ்த் திரை இசை வீடியோ உலக அளவில் சாதனை புரிந்துள்ளது இந்தியத் திரையுலகத்திற்கே பெருமையான ஒன்றுதான்.

.