'பத்து எண்றதுக்குள்ள' படத்துக்கு யு சான்றிதழ்

Posted in சினிமா செய்திகள்

விடுமுறை நாட்களை தேடி பரபரக்கின்றனர் பட அதிபர்கள். ஒவ்வொரு மாதமும் எந்த தேதிகளில் அரசு விடுமுறை? அந்த தேதியை ஒட்டி வாரவிடுமுறை வருகிறதா

என்று தேடுகின்றனர். அந்த அடிப்படையில் இந்த மாதம் 21 ஆம் தேதி சரஸ்வதிபூஜை, அதற்கு அடுத்த நாள் ஆயுதபூஜை, 23 ஆம்தேதி முகரம் என தொடர்ச்சியாய் மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. அதற்கு அடுத்த இரண்டு நாட்கள் வாரவிடுமுறை என்பதால் தொடர்ச்சியாய் 5 நாட்கள் விடுமுறை வருவதால் 21 அன்று படங்களை ரிலீஸ் செய்ய போட்டிபோடுகின்றனர். ஏற்கனவே ரஜினி முருகன், நானும் ரௌடிதான் ஆகிய படங்கள் 21 ஆம் தேதி வெளிவர உள்ள நிலையில், விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம், சமந்தா நடித்துள்ள 'பத்து எண்றதுக்குள்ள' படமும் அதே தேதியில் வெளியாகிறது. இப்படம் இன்று சென்சாருக்கு அனுப்பப்பட்டது. 

'பத்து எண்றதுக்குள்ள'படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு அனைவரும் பார்க்க கூடிய படம் என்கிற 'யு' சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள். 'ஐ' படத்திற்கு பிறகு விக்ரம் நடித்து வெளிவரவிருக்கும் படம் என்பதால் மட்டுமின்றி, சூப்பர் ஹிட்டான 'கோலிசோடா படத்திற்கு பிறகு விஜய் மில்டன் இயக்கியுள்ள படம் என்பதும் 'பத்து எண்றதுக்குள்ள' படத்தை எதிர்பார்க்க வைத்திருக்கிறது. விக்ரம், சமந்தா முதன் முதலாக ஜோடி சேர்ந்துள்ள படம் என்பது கூடுதல் அட்ராக்ஷன்.

.