தமிழில் வெளிவருகிறது டைகர் மவுண்ட்

Posted in சினிமா செய்திகள்

தி பட்டர் ப்ளை மர்டர்ஸ், ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் சைனா, திவாரியர், டபுள் டீம், ஆல் எபவுட் வுமன் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய சூயி ஹார்க்கின்

அடுத்த படம் தி டேக்கிங் ஆஃப் டைகர் மவுண்ட். இது ட்ராக்லே இன் தி ஸ்நோ பாரஸ்ட் என்ற பிரபல நாவலை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் விடுதலை படைக்கும், கொள்ளை கூட்டத்துக்கும் நடக்கும் போராட்டம் தான் கதை. 

இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் தோல்வி அடைகிறது. ஜப்பானில் உள்ள ஆயுத கிடங்குகளை ஒரு கொள்ளை கூட்டம் கைப்பற்றி இறுதியில் நாட்டையே கைப்பற்ற துடிக்கிறது. இந்த நிலையில் ஷாவோ ஜியான்போ தலைமையில் 203 என்ற பெயரில் மக்கள் படை திரள்கிறது. கொள்ளை கூட்டத்தை அழிக்க ஷாவோ பில்லா கதை பாணியில் தானும் ஒரு உளவாளியை கொள்ளைக்காரனாக மாற்றி அந்த கூட்டத்துக்கு அனுப்பி வைக்கிறார். அவன் அனுப்பும் தகல்களின் அடிப்படையில் கொள்ளை கூட்டத் தலைவன் ஹவ்யை எப்படி வெல்கிறார் என்பதும் உளவாளி ஜீராங் (ஹீரோ) எப்படி கொள்ளைகூட்டத்தின் நம்பிக்கையை பெற்று அவர்களின் திட்டங்களை கண்டுபிடிக்கிறார் என்பதும்தான் கதை. பனிமலையில் நடக்கும் போர், குதிரை சண்டை, வாள் சண்டை என பிரமாண்டமாக தயாராகி உள்ளது படம். 

 

சைனா மற்றும் ஜப்பானிய மொழியில் வெளியாகி உள்ள இந்தப் படம் விரைவில் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கில மொழியில் இந்தியாவில் ரிலீசாகிறது.

.