நயன்தாரா வழியில் விசாகா சிங்

Posted in சினிமா செய்திகள்

'பிடிச்சிருக்கு' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை விசாகா சிங். அந்தப் படம் சரியாகப்போகவில்லை. அதனால் விசாகா சிங்குக்கு பட வாய்ப்பு

கிடைக்கவில்லை. பிறகு சில வருட இடைவெளிக்குப் பிறகு சந்தானத்துடன் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தில் நடித்தார். அந்தப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. தொடர்ந்து 'ஒரு ஊர்ல ரெண்டு ராஜா' படத்தில் முக்கிய வேடமொன்றில் முகம் காட்டினார். மீண்டும் சந்தானத்துடன் இணைந்து வாலிபராஜா படத்தில் நடித்து வருகிறார். இப்படம் விரைவில் ரிலீஸாகவிருக்கிறது. 

 

'வாலிபராஜா' திரைப்படத்தை அடுத்து தற்போது அறிமுக இயக்குனர் மணிசர்மா இயக்கும் 'பயம் ஒரு பயணம்' என்ற ஹாரர் படமொன்றில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார் விசாகா சிங். இப்படத்தில் பேயாக வந்து ரசிகர்களை பயமுறுத்தப் போகிறாராம் விசாகா சிங். நயன்தாராவின் நடிப்பில், சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 'மாயா' படம்போல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இப்படம் உருவாகிறது. 'பயம் ஒரு பயணம்' முழுக்க முழுக்க மூணாறிலேயே படமாக்கப்பட்டு வருகிறது.

.