ரஜினி முருகன் படத்துக்கு போட்டியாக நானும் ரௌடிதான்

Posted in சினிமா செய்திகள்

காக்கிச்சட்டை படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயனுக்கும்.... தனுஷுக்கும் இடையில் மனக்கசப்பு என்று தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. அதை

இருவருமே மறுக்கவில்லை. சிவகார்த்திகேயன் மட்டும் அண்மையில் ஒரு தொலைக்காட்சிப்பேட்டியில் தனுஷ் உடனான பிரச்சனை பற்றி சூசகமாகக் குறிப்பிட்டார். 

 

இந்நிலையில், செப்டம்பர் 17 அன்று ரஜினி முருகன் படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட போது, அதே தேதியில் தான் தயாரித்த நானும் ரௌடிதான் படத்தை வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டார் தனுஷ். அன்றைய தேதியில் ரஜினி முருகன் வெளியாகவில்லை என்றதும் தன் படத்தையும் தனுஷ் ரிலீஸ் செய்யவில்லை. தற்போது அக்டோபர் 21 அன்று ரஜினி முருகன் படத்தை வெளியிட ஏற்பாடுகள் நடக்கின்றன. இதை அறிந்த தனுஷ், அதே தேதியில் நானும் ரௌடிதான் படத்தை வெளியிடவும் தீர்மானித்திருக்கிறாராம்.

.