எனக்கும் சிம்புவுக்கும் சண்டை மூட்ட வேண்டாம் - பாண்டிராஜ்

Posted in சினிமா செய்திகள்

கமல்ஹாசன் நடித்துள்ள 'தூங்காவனம்' படத்தின் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னையில் நடைபெற்றது. அப்போது விழாவுக்கு வந்திருந்த

பலரையும் பேச வைத்தார்கள். அதில் பேசிய பாண்டிராஜ் 'இது நம்ம ஆளு' படத்தின் படப்பிடிப்புக்கு சிம்பு எப்போதும் லேட்டாக வர அது பற்றி அவரிடம் கேட்டாராம். அதற்கு சிம்பு சிறு வயதிலிருந்தே நடிப்பதால் போரடிக்கிறது எனச் சொல்லியிருக்கிறார். 

கமல்ஹாசன் பட விழாவாயிற்றே கமல் ரசிகர்கள் கைதட்ட வேண்டுமென அப்போது அவர் சொன்ன பதிலை மீண்டும் இங்கு பதிவு செய்தார் பாண்டிராஜ். “கமல்ஹாசன் கூடத்தான் சின்ன வயசுல இருந்தே நடிச்சிட்டிருக்காரு. அவருக்கு போரடிக்கலையே” என பலத்த கைதட்டல்களுக்கிடையே அதைச் சொன்னார். ஆனால், சிம்பு தன்னையும் கமல்ஹாசனையும் ஒப்பிட வேண்டாம் என பாண்டிராஜிடம் சொல்லியிருக்கிறார். 

பாண்டிராஜ் கைதட்டல்களுக்காகப் பேசிய இந்தச் சம்பவம் தற்போது சிம்புவைப் பற்றி பாண்டிராஜ் குறைத்துப் பேசுவதாகச் செய்தியாகிவிட்டது. உடனே பதட்டமடைந்த பாண்டிராஜ், “இன்று காலைதான் சிம்புவைச் சந்தித்து 'இது நம்ம ஆளு' படத்தின் இசை வெளியீட்டைப் பற்றிப் பேசினேன். அதற்குள் எங்கள் இருவருக்கும் இடையே சண்டை மூட்ட வேண்டாம்,” எனக் கேட்டுக் கொண்டுள்ளார். 

 

கைத் தட்டல்களுக்காகப் பேசியதை கைகலப்பா ஆக்கிடுவீங்க போல இருக்கே...!

.