வடிவேலு பாணியில் நான்கடவுள் ராஜேந்திரன்!

Posted in சினிமா செய்திகள்

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தில் காமெடி காட்சிகளும் அதிகமாக உள்ளதாம். அந்த ஸ்கிரிப்ட்டை எழுதும்போது விஜய் நடித்த காவலன் படத்தில்

வடிவேலு நடித்தது போன்ற காமெடி காட்சிகளை அதிகமாக கலந்து எழுதினாராம் அட்லி. அதனால் விஜய்யுடன் வடிவேலுவும் இணைந்து அந்த காமெடி காட்சிகளில் நடித்தால் ரொம்ப சிறப்பாக இருக்கும் என்று கருதி, வடிவேலுவை அப்படத்தில் நடிக்க அழைத்தாராம் அட்லி. ஆனால், அந்த சமயத்தில் தெனாலிராமன் படத்தை முடித்து விட்டு எலி படத்தில் நடிக்க தயாரான வடிவேலு, இனிமேல் நான் முழுநேர ஹீரோவாக மட்டுமே நடிக்கப்போகிறேன். மீண்டும் காமெடியனாக நடிக்கும் ஐடியா இல்லை என்று கூறி விட்டாராம். 

 

அதனால் வடிவேலுவுக்காக உருவாக்கிய காமெடி வேடத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்று தீவிரமாக ஆலோசித்த அட்லி, நான் கடவுள் ராஜேந்திரன் தான் அதற்கு பொருத்தமாக இருப்பார் என்று அவரை புக் பண்ணினாராம். அந்த வகையில், தற்போது விஜய்யுடன் அப்படத்தில் காமெடி செய்து கொண்டிருக்கும் ராஜேந்திரன், படப்பிடிப்பை சுற்றி வேடிக்கை பார்ப்பவர்கள் வயிறு வலிக்க சிரிக்கும் அளவுக்கு காமெடி செய்கிறாராம். வடிவேலுவை மனதில் கொண்டு உருவாக்கிய வேடம் என்பதால் அவரது பாணியிலும் பர்பாமென்ஸ் கொடுத்துள்ளாராம் ராஜேந்திரன். அதைப்பார்த்து இந்த படத்திற்கு பிறகு காமெடியில் பெரிய இடத்தை நான் கடவுள் ராஜேந்திரன் பிடித்து விடுவார் என்கிறார்கள். அவர் கூடவே விஜய்யும் கலந்து கொள்வதால் இந்த படத்தில் காமெடி பெரிய அளவில் ஒர்க்அவுட்டாகும் என்று எதிர்பார்க்கிறாராம் அட்லி.

.