ஆட்டு எலும்புகறி சூப் / Mutton Bone Soup

Posted in சூப் வகைகள்

sunsamayal.com ஆடட எலமபகற சப

தேவையானபொருள்கள்

ஆட்டு எலும்புக் கறி                  -      1/2 கிலோ (சுத்தம் செய்யவும்)

தக்காளி                                  -       1/4 கிலோ

வெங்காயம்                            -       1/4 கிலோ (நறுக்கிக் கொள்ளவும்)

பச்சை மிளகாய்                       -       2

அரைக்க

இஞ்சி                            -      10 கிராம்

பூண்டு                                   -       10 கிராம் 

மிளகு தூள்                           -       2 டீஸ்பூன்

சீரகத் தூள்                            -       2 டீஸ்பூன்

மல்லித் தூள்                         -       2 டீஸ்பூன்

மல்லித் தளை                        -       1/2 கட்டு (சுத்தம் செய்து நறுக்கவும்)

நெய்                                    -       50 கிராம்

ரொட்டித்தூள்                          -       சிறிதளவு

எலுமிச்சை                           -       1/2 (சாறு எடுக்கவும்)

சர்க்கரை                              -       1/2 டீஸ்பூன்

உப்பு                                   -       தேவைக்கேற்ப

 செய்முறை

*தக்காளியை சுத்தம் செய்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

* ஒரு அகன்ற பாத்திரத்தில் நெய்யை ஊற்றிசூடானதும் நறுக்கிய வெங்காயம்பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும்.

*அது பொன்னிறமானதும்இஞ்சிபூண்டு விழுதைச் சேர்த்துஎலும்பையும் சேர்த்து நன்கு வதக்கவும்.

*பின் மிளகு தூள்சீரகதூள்தனியாதூள்கொத்தமல்லி இலை சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீரைச் சேர்த்து மூடி விடவும்.

* தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும். 1/4 லிட்டர் நீரைச் சுண்ட வைக்கவும்.

* பின் அரைத்த தக்காளி விழுடிமச் சேர்த்து சூப்பை இறக்கவும்.

* பின் சூப்பை வடிகட்டி தூள் செய்த ரொட்டியைத் தூவவும். (கார்ன் மாவும் உபயோகிக்கலாம்)

*பின் எலுமிச்சம்பழச்சாறுசர்க்கரை சேர்க்கவும். உப்பை சரிபார்த்து சூப்பை இறக்கிப் பறிமாறவும்..

*இப்போது சுவையான ஆட்டு எலும்புகறிசூப் ரெடி.!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Tomato Health Benefits And Minerals

.