மட்டன் மில்க் சூப் / Mutton Milk Soup

Posted in சூப் வகைகள்

sunsamayal.com  mutton milk soup

தேவையானபொருள்கள்

மட்டன்                                   -           ½  கிலோ

காரட்                                       -          2
உருளைக்கிழங்கு                  -          2
பெரிய வெங்காயம்

மைதா                                     -          2 மேசைக்கரண்டி

பச்சை பட்டாணி                      -          அரை கப்
கிராம்பு                                    -          5

ஏலக்காய்                                -          3

பட்டை                                    -          சிறுதுண்டு

மிளகு                                     -          5

பால்                                         -          அரை கப்

உப்பு                                        -          தேவையான அளவு

செய்முறை

*உருளைக்கிழங்கு, கேரட்டினை தோல் நீக்கி துண்டுகளாக அரிந்துகொள்ளவும். மட்டனை சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

*ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் கிராம்பு, ஏலம், மிளகு, பட்டை, நறுக்கிய வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.

*அதில் நறுக்கி வைத்துள்ள காய்களையும், கறியையும் சேர்த்து நன்கு வதக்கவும்.

*பிறகு பாலையும், மைதாமாவினையும் சேர்த்து கலந்து வேகவிடவும்.

*அதன்பின் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து, பச்சைபட்டாணியுடன் குக்கரில் போட்டு வேகவிடவும்.

*வெந்ததும் இறக்கி சூடாக பரிமாறவும்.

*இப்போது சுவையான மட்டன் மில்க் சூப் ரெடி.!!!!!!!!!!!!!!!!!!!!!!!

 MUTTON HEALTH BENEFITS AND NUTRITITON FACTS

Carrot Health Benefits And Minerals

Potatoes health benefits and minerals

.