சிக்கன் பால் சூப் / CHICKEN MILK SOUP

Posted in சூப் வகைகள்

தேவையான பொருட்கள்

உப்பு சேர்க்காத பட்டர்          -      2 மேஜைக்கரண்டி

வெங்காயம்                   -      1 (நடுத்தர அளவு)நறுக்கியது

பச்சை மிளகாய்               -      1 (நறுக்கியது)

மைதா                         -      3 மேஜைக் கரண்டி

சிக்கன் ஸ்டோக்                -      2 கப்

 பால்                          -      2 கப்

உப்பு                           –       தேவையான அளவு

சிக்கன்                        -      1 கப்(சிறியதாக நறுக்கியது)

செய்முறை

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

கடாயில் வெண்ணெய் விட்டு சூடாக்கவும்

வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்

சிறிது நேரம் வதக்கவும்

மைதா சேர்க்கவும்

சிறிது நேரம் கிளறவும்

மைதா மாவில் உள்ள பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்

சிக்கன் ஸ்டோக் சேர்த்து நன்கு கலக்கவும்

பின்பு பால் சேர்க்கவும்

நன்கு கலக்கவும்

உப்பு சேர்க்கவும்

கறுப்பு நல்ல மிளகு சேர்க்கவும்

பின்பு நறுக்கிய சிக்கன் சேர்க்கவும்

நன்கு கலக்கவும்

சிக்கன் சூப் ரெடி

Chicken Health Benefits And Nutrititon Facts

.