தேங்காய் சாதம் / COCONUT RICE

Posted in சாதம் வகைகள்

download.jpg - 10.68 KB

தேவையான பொருட்கள்:

சாதம்                    -  1 கப்

தேங்காய்                -   1/2 முடி

பச்சை மிளகாய்            -   3

கடுகு                    -   1 /2 மேஜைகரண்டி

உளுத்தம் பருப்பு         -   1 மேஜைகரண்டி

கடலைப் பருப்பு         -   1 /2 மேஜைகரண்டி

கறிவேப்பிலை         -    4

உப்பு                    -    தேவையான அளவு

எண்ணெய்              -   2 மேஜைகரண்டி

செய்முறை:

முதலில்  தேங்காய்  துருவி கொள்ளவும். பச்சைமிளகாய் துண்டாக வெட்டி கொள்ளவும்.  

ஒரு வாணலியில்  எண்ணெய் ஊற்றி அதில் கடுகு போட்டு தாளித்து, பின்  உளுத்தம் பருப்பு கடலைப்பருப்பு,   சேர்த்து வறுக்கவும்.

அதன் பின் அதில் பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.

வதங்கிய பிறகு உப்பு , சேர்த்து தேங்காய் துருவல்  சேர்த்து நன்றாக  வதக்கவும்.

கடைசியில் சாதம் சேர்த்து நன்றாக கிளறவும்.

 இப்பொழுது சுவையான தேங்காய் சாதம் ரெடி

Coconut Health Benefits And Minerals

.