புதினா காய்கறி சாதம் / Mint Vegetable Rice

Posted in சாதம் வகைகள்

A11579_11.jpg - 50.19 KB

அரிசி                                -          ஒரு கப்
பீன்ஸ்                                -          4
காரட்                                  -          ஒன்று
காலிஃப்ளவர்                      -          கால் பகுதி
பச்சை மிளகாய்               -          4
வெங்காயம்                      -          3
புதினா                               -          10 கொத்து
மல்லித் தளை            -         5 கொத்து
பட்டை                             -          2 துண்டு
கிராம்பு                             -          6
ஏலக்காய்                         -          3
உப்பு                                 -          ஒரு தேக்கரண்டி
தேங்காய்                         -          ஒரு மூடி
பூண்டு                              -          10 பல்
எண்ணெய்                       -          6 மேசைக்கரண்டி

 செய்முறை

வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். பீன்ஸ், கேரட்டை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். காலிஃப்ளவரை துண்டுகளாக நறுக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.

A11579_01.jpg - 51.60 KB

தேங்காயை துருவிக்கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.

A11579_02.jpg - 42.69 KB

அரிசியைக் களைந்து மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

A11579_03.jpg - 32.46 KB

மிக்ஸியில் கொத்தமல்லித் தழை, புதினா, பச்சை மிளகாய், பூண்டு போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும்.

A11579_04.jpg - 40.53 KB

தேங்காய் துருவலுடன் ஒரு கப் தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் அரைத்து பிழிந்து வடிகட்டி பால் எடுத்துக் கொள்ளவும். மேலும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அரைத்து பிழிந்து மற்றொரு கப் பால் எடுத்துக் கொள்ளவும்.

A11579_05.jpg - 29.29 KB

குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

A11579_06.jpg - 39.22 KB

2 நிமிடங்கள் கழித்து நறுக்கி வைத்துள்ள பீன்ஸ், காரட், காலிஃப்ளவர் ஆகியவற்றைப் போட்டு, மேலும் 2 நிமிடங்கள் வதக்கவும். பிறகு அரைத்த பச்சை மிளகாய் கலவையை ஊற்றி கிளறிவிட்டு 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

A11579_07.jpg - 46.60 KB

அதனுடன் தேங்காய் பால், உப்பு சேர்த்து 2 நிமிடங்கள் கழித்து ஊறவைத்த அரிசியை தண்ணீரை வடிகட்டிவிட்டு சேர்த்து கிளறிவிடவும்.

A11579_08.jpg - 36.66 KB

குக்கரை மூடி வெயிட் போட்டு 4 விசில் வரும் வரை வேகவிடவும்.

A11579_09.jpg - 38.69 KB

பிறகு குக்கரை திறந்து (விரும்பினால்) முந்திரியை வறுத்து சேர்க்கவும்.

A11579_10.jpg - 40.85 KB

சுவையான புதினா ரைஸ் தயார். இதை தயிர் பச்சடியுடன் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.

A11579_11.jpg - 50.19 KB

 

Carrot Health Benefits And Minerals

Beans Health Benefits And Minerals

Cauliflower Health Benefits And Minerals

.