ஆம்லெட் மசாலா ரைஸ் / OMELETTE MASALA RICE

Posted in சாதம் வகைகள்

A11670 07
தேவையானபொருள்கள்:

அரிசி                          -      ஒரு கப் (ரைஸ் குக்கர் கப்)

முட்டை                        -      4

வெங்காயம்                   -      2

தக்காளி                      -      ஒன்று

பிரியாணி மசாலா          -      2 1/2 தேக்கரண்டி

தயிர்                           -      3 தேக்கரண்டி

மஞ்சள் தூள்                -      கால் தேக்கரண்டி

மிளகு தூள்                  -      அரை தேக்கரண்டி

மல்லித் தளை              -      சிறிது

உப்பு                         -      தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய்                 -      2 மேசைக்கரண்டி

வத்தல் மிளகாய்         -      2

கறிவேப்பிலை             -      சிறிது

சோம்பு                       -      அரை தேக்கரண்டி

பட்டை                        -      ஒரு துண்டு

கிராம்பு                      -      2

செய்முறை : 

அரிசியை வேகவைத்து உதிரியாக வடித்து ஆறவிடவும். முட்டையுடன் உப்பு, மிளகுத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து அடித்து ஆம்லெட் போட்டு துண்டுகளாக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும்

A11670_01.jpg - 46.46 KB

 கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க வேண்டியவற்றை தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

A11670_02.jpg - 55.15 KB

வெங்காயம் நிறம் மாறியதும் தக்காளி சேர்த்து கரையும் வரை நன்கு வதக்கவும்.

 A11670_03.jpg - 57.19 KB

தக்காளி வதங்கியதும் பிரியாணி மசாலாதயிர் மற்றும் உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

A11670_04.jpg - 56.52 KB

 

 அதனுடன் ஆம்லெட் துண்டுகளைச் சேர்த்துலேசாக தண்ணீர் தெளித்து முட்டையில் மசாலா சேரும் வரை வேகவிடவும்.

A11670_05.jpg - 53.95 KB

பின் சாதத்தைச் சேர்த்து நன்கு கிளறிவிட்டு கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.

A11670_06.jpg - 44.33 KB

சுவையான ஆம்லெட் மசாலா ரைஸ் தயார்.

A11670_07.jpg - 41.71 KB

 

Egg Health Benefits And Minerals

.