சோளம் பட்டாணி ப்ரைடு ரைஸ் / Corn Green Peas Fried Rice

Posted in சாதம் வகைகள்

sunsamayal.com   Corn Green Peas Fried Rice

தேவையான பொருட்கள்

சாதத்துக்கு...

பாசுமதி அரிசி                -      2 கப்

ஏலக்காய்                           -        3

பட்டை                              -       3

கிராம்பு                       -      3

தாளிக்க                      -      சீரகம் 2 டீஸ்பூன்

பிரியாணி இலை                 -      2,

வெண்ணெய்                 -      1 டேபிள்ஸ்பூன்

எண்ணெய்                   -      சிறிது

உப்பு                        -      தேவைக்கேற்ப

கலவைக்கு...

வேக வைத்த பட்டாணி      -      1 கப்

கார்ன் (சோளம்)             -      1 கப்

மல்லித் தூள்                -      2 டீஸ்பூன்

கரம் மசாலா                 -      1 டீஸ்பூன்

நறுக்கிய வெங்காயம்         -      1 கப்

தக்காளி                      -      1 கப்

கீறிய பச்சை மிளகாய்        -      4 முதல் 6

இஞ்சி                        -      1 டேபிள்ஸ்பூன் (மெலிதாகநீளமாக நறுக்கியது)

உப்புஎண்ணெய்              -      தேவைக்கு

மல்லித் தளை                -      சிறிது.

செய்முறை

பாசுமதி அரிசியைக் களைந்துஅரை மணி நேரம் ஊற வைக்கவும். கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய் சேர்க்கவும். காய்ந்ததும்சீரகம்ஏலக்காய்,  பட்டைகிராம்புபிரிஞ்சி இலை சேர்த்துத் தாளிக்கவும். பிறகு அரிசியையும் சேர்த்து2 மடங்கு தண்ணீர் விட்டுஉப்பு சேர்த்து வேக வைத்து  எடுக்கவும். 

இன்னொரு கடாயில் எண்ணெய் விட்டுசீரகம் தாளிக்கவும். பிறகு வெங்காயம்இஞ்சிபச்சை மிளகாய் சேர்க்கவும். வெங்காயம் இளம் சிவப்பு  நிறத்துக்கு வதங்கியதும்வெந்த பட்டாணிதக்காளிஉப்புகரம் மசாலாதனியா தூள் சேர்த்துக் கலந்துபிறகு கடைசியாக சோளத்தைச் சேர்த்துக்  கிளறவும். தயாராக உள்ள காய்கறிக் கலவையைவடித்து வைத்துள்ள சாதக் கலவையுடன் கலந்து1 நிமிடம் கடாயிலேயே சுட வைத்து,  கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.

 Sweet Corn Health Benefits And Minerals

Green Peas Health Benefits And Minerals

.