தேங்காய் எள் புளியோதரை / Coconut Sesame Puliyodharai

Posted in சாதம் வகைகள்

sunsamayal.com  Puliyodharai

சாதத்துக்கு...

பொன்னி பச்சரிசி                -      2 கப்,

உப்பு                            -      தேவையான அளவு,

மஞ்சள் தூள்                    -      சிறிது,

நல்லெண்ணெய்                 -      4 டீஸ்பூன்.

பொடிப்பதற்கு...

வத்தல் மிளகாய்                   -      4,

மல்லிகடலைப் பருப்பு  -      தலா 2 டேபிள் ஸ்பூன்,

சுத்தமான கருப்பு எள்           -      2 டீஸ்பூன்,

கொப்பரைத் தேங்காய்         -      கால் மூடி.

புளிக் கரைசலுக்கு...

கருப்பு புளி                     -      ஒரு பெரிய ஆரஞ்சு பழ அளவு,

வெல்லம்                      -      எலுமிச்சை அளவு,

மஞ்சள் தூள்                   -      அரை டீஸ்பூன்,

உப்பு                           -      தேவையான அளவு,

பெருங்காயம்                   -      அரை டீஸ்பூன்.

தாளிக்க...

நல்லெண்ணெய்                -      தேவைக்கேற்ப,

கடுகு                          -      அரை டீஸ்பூன்,

கடலைப்பருப்புஉளுந்து       -      தலா 1 டேபிள் ஸ்பூன்,

காய்ந்த மிளகாய்               -      6 முதல் 8,

நிலக்கடலை                  -      அரை கப்,

கறிவேப்பிலை                 -      சிறிது.

செய்முறை:

*பொடிப்பதற்குக் கொடுத்துள்ள பொருள்களைத் தனித்தனியே வறுத்துப் பொடிக்கவும்.

*எள்ளையும்தேங்காய் கொப்பரையையும் கடைசியில் சேர்த்துப் பொடிக்கவும்.  இரண்டையும் சேர்த்து மிக்ஸியில் 2 சுற்று சுற்றி எடுக்கவும்.

*புளிவெல்லம் இரண்டையும் சுத்தம் செய்து புளியை நன்கு ஊற வைத்துக் கரைத்து அத்துடன் வெல்லத்தையும் சேர்த்து கெட்டியாகக் கரைத்து வடிகட்டி வைக்கவும்.  

*அதைக் கொதிக்க வைத்து உப்புமஞ்சள் தூள் சேர்த்து வைத்துக் கொள்ளவும். அரிசியை உதிரிஉதிரியான சாதமாக வடிக்கவும்.

*பின் அதை ஒரு தட்டில் கொட்டிப் பரப்பிசிறிது உப்பு சேர்த்து 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து ஆற விடவும். எண்ணெயைக் காய வைத்து தேவையான அளவு கடுகுகடலைப் பருப்புவேர்க்கடலைஉளுந்துகாய்ந்த மிளகாய்கறிவேப்பிலைபெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து வறுத்துபுளிக் கரைசலுடன் கலந்து வைத்துக் கொள்ளவும். 

*இப்போது சாதத்தில் கொஞ்சம் தாளித்த புளிக் கரைசல் சேர்த்துக் கலந்துஅதற்கு மேல் பொடியைத் தூவிக் கிளறவும்.

*உப்புபுளிகாரம் சரியாக இருக்கிறதா எனப் பார்த்துஅதற்கு மேல் வறுத்த வேர்க்கடலைகறிவேப்பிலையை இன்னும் கொஞ்சம் தூவி அலங்கரித்துஆறியதும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

*  இந்த தேங்காய் எள் புளியோதரை /  2-3 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். கை படாமல் வைத்திருக்க வேண்டும். 

கோயில்களில் கொடுக்கும் பிரசாதம் போலவே இருக்கும். காரமான உருளைக்கிழங்கு பொரியல்வாழைக்காய் வறுவலுடன் பரிமாறலாம். 

 Peanuts Health Benefits And Minerals

Black Beans Health Benefits And Minerals

.