எக் சிக்கன் ப்ரைடு ரைஸ் / EGG CHICKEN FRIED RICE

Posted in சாதம் வகைகள்

sunsamayal.com  bean sprouts fried ric1

தேவையான பொருட்கள்

வெங்காயம்                           3 /4 கப் (பொடியாக நறுக்கியது)

எண்ணெய்                            2  1 /2 மேசைக்கரண்டி

முட்டை                                1  – 2 (முட்டையை லேசாக அடித்துக் கொள்ளவும்)

சோயா சாஸ்                     1 /4 தேக்கரண்டிக்கும் குறைவாக

நல்லெண்ணெய்             -      1 /4 தேக்கரண்டிக்கும் குறைவாக

சிக்கன் எலும்பில்லாதது          1  கப் வேக வைத்தது  (விருப்பமெனில்)

காரட்                                    1 /2 கப்

பட்டாணி                              1 /2 கப்

வெங்காயத் தாள்                   4

முளை கட்டிய பயறு              1 கப்

சோயா சாஸ்                    2  மேசைக்கரண்டி

சாதம்                            4  கப் (வேக வைத்து ஆற வைத்தது )

செய்முறை

 *பாஸ்மதி அரிசியை பயன்படுத்திக் கொள்ளவும்.

*அரிசியைக் கழுவி கடாயில் லேசாகஅரிசியின் ஈரப் பதம் வற்றும் வரை வறுத்துக் கொள்ளவும்.

*1  கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் ஊற்றி வேக வைத்துஆற வைத்துக் கொள்ளவும். குறைந்தது 4 6  மணி நேரம் வரை ஆற வைத்துக் கொள்ளவும்.

*சாதத்தை பிரிட்ஜில் வைத்தும் பயன்படுத்தலாம். பழைய சாதம் ப்ரைடு ரைஸ்செய்வதற்கு நன்றாக இருக்கும்.

*சாதம் நன்றாக ஆரினால்தான் ப்ரைடு ரைஸ் செய்வதற்கு நன்றாக இருக்கும்.கடாயில் 1  மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றிபொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பிரவுன் கலராகும் வரை வதக்கிக் கொள்ளவும்.

*வதக்கிய  *வெங்காயத்தை தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.முட்டையுடன் நல்லெண்ணெய் மற்றும் சோயா சாஸ் கலந்து வைத்துக் கொள்ளவும்.

*அதே கடாயில் 1 /2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடாயைச் சுற்றிலும் எண்ணெய் படருமாறு செய்யவும் , கலந்து வைத்துள்ள முட்டை கலவையை ஊற்றி கடாயைச் சுற்றிலும் படருமாறு செய்யவும். முட்டை மேலே எழும்பி வரும்போது அதை திருப்பிப் போட்டு வேக விட்டுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

*இல்லையெனில் கலந்து வைத்துள்ள முட்டையைக் கடாயில் ஊற்றி லேசாக வதக்கி (முட்டை பொரியலுக்கு செய்வது போல) எடுத்துக் கொள்ளவும்.

*கடாயில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றிவேக வைத்துள்ள சிக்கன்கேரட்பட்டாணி மற்றும் வதக்கிய வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கிக் கொள்ளவும் .

*இதனுடன் வேக வைத்து வைத்துள்ள சாதம்வெங்காயத்தாள் பொடியாக நறுக்கியதுமுளை கட்டிய பயறு  (bean sprouts ) அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து கலந்து 3  நிமிடங்கள் வதக்கவும்.

*இதனுடன் 2  மேசைக்கரண்டி சோயா சாஸ் மற்றும் நற்க்கி வைத்துள்ள முட்டை சேர்த்துக் கலந்து 1 நிமிடம் வதக்கிப் பரிமாறவும்.

 Chicken Health Benefits And Nutrititon Facts

Egg Health Benefits And Minerals

.