மசாலா புளி சாதம் / Masala Tamarind Rice

Posted in சாதம் வகைகள்

sunsamayal.com  Masala Tamarind  Rice

புளிக் காய்ச்சலுக்கு:

வத்தல் மிளகாய்         -      12

மல்லி                       -      3 ஸ்பூன்

வெந்தயம்                   -      2ஸ்பூன்

பெருங்காயம்             -      ஒரு சிறிய துண்டு

விரலி மஞ்சள்            -      ஒரு துண்டு

அல்லது

மஞ்சள்தூள்              -      ஒரு ஸ்பூன்

புதுப்புளி                     -      சாத்துக்குடி அளவு

உப்பு                          -      தேவைக்கேற்ப

தாளிப்பதற்கு:

நல்லெண்ணெய்          -      100 மிலி

கடுகு                        -      ஒரு ஸ்பூன்

உளுத்தம் பருப்பு        -       ஒரு ஸ்பூன்

கடலைப் பருப்பு         -       2 ஸ்பூன்

பெருங்காயம்              -      ஒரு சிட்டிகை

பச்சை நிலக்கடலை  -      4 ஸ்பூன்

(வேர்க்கடலை)

வத்தல் மிளகாய்        -      1

செய்முறை

வரமிளகாய்மல்லிவெந்தயம்பெருங்காயம் ஆகியவற்றை வெறும் வாணலியில் சூடுபடுத்திவாசம் வரும் வரை வறுத்துசிறிது பெருபெருவென பொடி செய்யவும். புளியை 2 டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து கரைத்து அத்துடன் மஞ்சள் தூள் சேர்க்கவும். 

பின்னர் வாணலியில் எண்ணெய் சுட வைத்து கடுகுஉளுத்தம் பருபுகடலைப் பருப்புபெருங்காயம்நிலக்கடலைஇரண்டாகக் கிள்ளிய வர மிளகாய் ஆகியவற்றைப் போட்டு சிவந்ததும்புளியை விட்டு கொதிக்க விடவும். 10 நிமிடங்கள் கழித்த திரித்த பொடிகளைச் சேர்த்துகட்டியில்லாமல்கலக்கி  சிறிது கெட்டியானதும் உப்பு சேர்த்துஎண்ணெய் மேலே மிதந்து வரும் தருவாயில் அடுப்பிலிருந்து பாத்திரத்தை இறக்கி விடவும். 

வேண்டிய அளவு சாதத்தை எடுத்து ஆற விட்டு ஒரு ஸ்பூன் பச்சை நல்லெண்ணெய் விட்டுக் கிளறிபுளிக் காய்ச்சலில் சிறிது போட்டுக் கிளறவும்.

Tamarind Health Benefits And Minerals

Peanuts Health Benefits And Minerals

.