வெஜ் அவல் ரைஸ் / VEGETABLE & BEATEN RICE

Posted in சாதம் வகைகள்

sunsamayal.com  Puffed rice fry

தேவையான பொருட்கள்:

கைக்குத்தல் அவல்       -        100 கிராம்

முட்டை கோஸ்          -       100 கிராம் (பொடியாக நறுக்கிய)

பீன்ஸ், காரட்             -       100 கிராம் (பொடியாக நறுக்கிய)

குடை மிளகாய்          -       100 கிராம் (பொடியாக நறுக்கிய)

வெங்காயத் தாள்        -       சிறிது (பொடியாக நறுக்கிய)

பச்சை மிளகாய்             -          2

மிளகு தூள்             -       தேவைக்கேற்ப

இஞ்சி                   -       1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கிய)

பூண்டு                  -       10 பல்

எண்ணெய்              -       2 டீஸ்பூன்

உப்பு                    -       தேவைக்கேற்ப

செய்முறை

 *அவலை சுத்தம் செய்து, கல் நீக்கி, கழுவி, 10 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்து, வடிகட்டி வைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு, முதலில்  வெங்காயத் தாளின் வெள்ளைப் பகுதியை நறுக்கி வதக்கவும். பிறகு இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

*கேரட், பீன்ஸ், குடமிளகாய்,  முட்டைகோஸ் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து, உப்பு தூவி வதக்கவும்.

*காய்கறிகள் நன்கு வதங்கியதும், வடிகட்டி வைத்துள்ள  அவலைச் சேர்த்துக் கிளறி, 5 நிமிடங்களுக்கு மூடி வைக்கவும்.

*பிறகு வெங்காயத் தாளின் பச்சைப் பகுதியைச் சேர்த்து, மிளகுத்தூள் தூவிப்  பரிமாறவும்.

 Beaten Rice Health Benefits And Nutrititon Facts

Cabbage Health Benefits And Minerals

.