காய்கறி சாதம் / Vegitable cooked Rice

Posted in சாதம் வகைகள்

sunsamayal.com  Vegitable cooked Rice

தேவையான பொருட்கள்:

வேகவைத்த சாதம்        -        2 கப்

காரட்                           -        1

பீன்ஸ்                    -        10 முதல் 12

மிளகு தூள்             -        1 டீஸ்பூன்

பச்சை மிளகாய்        -        3 அல்லது 4

பெரிய வெங்காயம்        -        1

பட்டை                   -        1 துண்டு

பசுமை ஏலக்காய்         -        பொடி செய்தது 3 அல்லது 4

கிராம்பு                       -        4

சீரகம்                    -        1 தேக்கரண்டி

பூண்டு                   -        1தேக்கரண்டி

உப்பு                     -        தேவையான அளவு

நெய்(அ) எண்ணெய்      -        2 டீஸ்பூன்

மல்லித் தளை     -        ஒரு சிறிய கொத்து

செய்முறை:

 *கேரட், மிளகாய், பீன்ஸ், ஆகியவற்றை நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். வெங்காயத்தை கொஞ்சம் பெரிய அளவில் நறுக்கிகொள்ளலாம்.

*சமைத்து  வைத்த சாததை ஒரு கப்பில்  எடுத்துக்கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து நெய் அல்லது எண்ணெய்யை ஊற்றி வெங்காயத்தை போட்டு  வதக்கவும்.

*வெங்காயம் பழுப்பு நிறத்தில் வருவதற்கு முன்பு இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வெங்காயம் பழுப்பு நிறத்தில் வரும் வரை  வதக்கவும்.

*சில நொடிகள் கழித்து துண்டாக வெட்டப்பட்ட பூண்டையும் அதனுடன் சேர்க்கவும்.. ஒரு நிமிடம் கழித்து துண்டாக்கப்பட்ட காய்கறிகள்,  பச்சை மிளகாயை போட்டு உப்பு சேர்த்து கிளறவும்.

*பின்னர் காய்கறிகளை மூடிவைத்து வேகவிடவேண்டும். காய்கறிகள் வெந்ததும்  சாதத்தை  சேர்த்து நன்கு கிளறவும்.

*பின்னர் கொத்தமல்லி இலையை தூவி அழகுபடுத்தவும். காய்கறி சாதம்  ரெடி.  !!!

இந்ந காய்கறி சாதம்   மிகவும் சுவையாக இருக்கும் . சத்தானதும் கூட!!!!!!

.