நெய் சாதம் / GHEE RICE

Posted in சாதம் வகைகள்

A11708_09.jpg - 54.40 KB

தேவையான பொருள்கள்:

பாஸ்மதி அரிசி                           -           2 கப்
வெங்காயம்                                -          ஒன்று
பான்டன் இலை                          -          ஒரு துண்டு
இஞ்சி, பூண்டு விழுது                -           2 தேக்கரண்டி
தயிர்                                            -           2 தேக்கரண்டி
மல்லித் தளை                             -           சிறிது
நெய் (அ) வெண்ணெய்              -            4 தேக்கரண்டி
உப்பு                                             -            தேவைக்கு
தண்ணீர்                                      -             3 கப்

தாளிக்க:
பட்டை கிராம்புஏலக்காய், அன்னாசிப்பூ - தலா ஒன்று

 செய்முறை:

வெங்காயத்தை நீளவாட்டில் நறுக்கிக் கொள்ளவும். மல்லித் தழையை சுத்தம் செய்து வைக்கவும். மற்ற தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.

 A11708_01.jpg - 42.12 KB

ஒரு பாத்திரத்தில் நெய் (அ) வெண்ணெயை உருக்கி, அதில் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளிக்கவும்.

 A11708_02.jpg - 35.58 KB

தாளித்தவற்றுடன் வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

 A11708_03.jpg - 37.19 KB

பிறகு இஞ்சி, பூண்டு விழுது, தயிர் மற்றும் மல்லித் தழை சேர்த்து வதக்கவும்.

 A11708_04.jpg - 39.76 KB

அரிசியைக் களைந்து ரைஸ் குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி உப்பு போடவும்.

 A11708_05.jpg - 34.18 KB

அதனுடன் தாளித்தவற்றைச் சேர்த்து குக்கரை மூடி ஆன் செய்யவும்.

 A11708_06.jpg - 39.09 KB

கொதிக்கும் போது இடையில் ஒரு முறை குக்கரைத் திறந்து கிளறிவிடவும்.

 A11708_07.jpg - 36.88 KB

பிறகு மூடி போட்டு மீண்டும் வேகவிடவும். குக்கர் வாமில் வந்ததும் சிறிது நேரம் அதிலேயே வைத்திருந்து எடுக்கவும்.

 A11708_08.jpg - 41.95 KB

கமகம நெய் சோறு ரெடி.

 A11708_09.jpg - 54.40 KB

 

.