குடமிளகாய் வெங்காய மசாலா சாதம் / Capsicum Onion Masala Rice

Posted in சாதம் வகைகள்

sunsamayal.com  Capsicum Onion Rice

தேவையான பொருட்கள்:

உதிராக வடித்த சாதம்         -        2 கப்

குடை மிளகாய்                      -        1

வெங்காயம்                         -        2

பச்சை மிளகாய்                     -        2

மிளகு தூள்                   -        1 டீஸ்பூன்

சீரகம் தூள்                   -        அரை டீஸ்பூன்

மஞ்சள் தூள்                  -        கால் டீஸ்பூன்

உப்பு                         -        தேவைக்கேற்ப

எண்ணெய், நெய்              -        சிறிது

முந்திரி, திராட்சை             -        சிறிது

கறிவேப்பிலை,மல்லித் தளை    -        சிறிது

செய்முறை:

 *குடமிளகாய், வெங்காயம் இரண்டையும் நீளவாக்கில் நறுக்கவும். பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயம்  சேர்த்து வதக்கவும். பிறகு குடமிளகாய் சேர்த்து வதக்கவும்.

*லேசாக வதங்கியதும் பச்சை மிளகாய் சேர்க்கவும். அதில் மிளகுத் தூள், சீரகத் தூள், உப்பு  சேர்த்து, பச்சை வாடை போக நன்கு வதக்கவும்.

*வடித்து வைத்துள்ள சாதத்தில் சேர்த்துக் கிளறவும்.

*நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்துச் சேர்த்து,  பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவிப் பரிமாறவும்.

Capsicum Health Benefits And Minerals

.