உருளைக்கிழங்கு பருப்பு சாதம் / Potato Dal Rice

Posted in சாதம் வகைகள்


தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு      -       5 (வேக வைத்தது)

வெங்காயம்                -          2

பச்சை மிளகாய்          -         6

பூண்டு                 -       7 (பல்)

மஞ்சள் தூள்           –        சிறிது

உப்பு                   -       தேவைக்கேற்ப

வடித்த சாதம்          -       3 கப்

எண்ணெய்             -       தேவைக்கேற்ப

வறுத்தரைக்க

உளுத்தம் பருப்பு       -       1 டேபிள் ஸ்பூன்

கடலைப் பருப்பு        -       2 டேபிள் ஸ்பூன்

மல்லித் தூள்          -       1 டேபிள் ஸ்பூன்,

வத்தல் மிளகாய்          -       5

செய்முறை:

*உருளைக்கிழங்கை வேக வைத்து, மசித்துக் கொள்ளவும்.

*வறுத்தரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை எண்ணெய் விட்டோ, எண்ணெய் இல்லாமலோ வறுத்துப் பொடிக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள் தூள், வேக வைத்து மசித்த உருளைக் கிழங்கு சேர்த்து, வறுத்த பொடியைச் சேர்த்து, வடித்த சாதத்தைக் கலந்து கிளறி இறக்கவும்.

*தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்கு கிளறவும். பரிமாறும்போது, பொடித்த அப்பளத்தைப் பொடித்துச் சேர்த்து, மெதுவாகக் கிளறிப் பரிமாறவும். 

.