சோள,பனீர் சாதம் / Corn Paneer Coocked Rice

Posted in சாதம் வகைகள்

sunsamayal.com   Corn Paneer Coocked Rlce

தேவையான பொருட்கள்:

பாசுமதி சாதம்                  -       2 கப்

சோளம், பச்சை பட்டாணி, 

பன்னீர்                         -       ஒரு கப் (எல்லாம் சேர்த்து)

பட்டை                         -       ஒரு துண்டு

ஏலக்காய், லவங்கம்             -       தலா 2

நெய் (எண்ணெய் சேர்த்து)      -       2 டேபிள் ஸ்பூன்

உப்பு                           -       தேவையான அளவு

பிரியாணி இலை                     -          1

பச்சை மிளகாய்                       -          4

சர்க்கரை                       -       1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

*பாசுமதி அரிசியை உதிரி உதிரியாக வடித்து வைத்துக் கொள்ளவும்.

*ஃபிரஷ் சோள முத்துக்கள், பச்சைப் பட்டாணி அனைத்தையும் தனித்தனியாக வேகவைத்துக் கொள்ளவும்.

*பனீரை பொடியாக நறுக்கி கொதிக்கும் தண்ணீரில் போட்டு 2 நிமிடத்துக்குப் பின் எடுத்து வடித்து வைக்கவும். 

 *ஒரு வாயகன்ற கடாயில் முதலில் நெய் மற்றும் எண்ணெய் (சேர்த்தது) விட்டுக் காய்ந்ததும் பட்டை, லவங்கம், பெரிய ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து வெடிக்கவிட்டு, பின் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி இத்துடன் சோள முத்துக்கள், பட்டாணி, சர்க்கரை, பனீர், வடித்த சாதம், உப்பு சேர்த்து மெதுவாக சாதம் உடையாமல் கிளறி, இறக்கி, பரிமாறவும்.

*விருப்பப்பட்டால் 10 முந்திரி வறுத்து சேர்க்கலாம். 

*இப்போது கமகம சுவையான சோள,பனீர் சாதம் ரெடி .!!!!!!!

 Sweet Corn Health Benefits And Minerals

Green Peas Health Benefits And Minerals

Paneer Health Benefits And Minerals

.