சாக்லேட் கேக் / CHOCOLATE CAKE

Posted in மைக்ரோவேவ்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி / மைதா                -  3/4 கப்

சர்க்கரை                         -  1/2 கப்

கொக்கோ தூள்                  -  2 மேஜைக்கரண்டி

சமையல் சோடா                -  1/4 தேக்கரண்டி

பேக்கிங் பவுடர்                  -  1/4 தேக்கரண்டி

பால்                               -  1/2 கப்

எண்ணெய்                        -  2 மேஜைக்கரண்டி

வெண்ணிலா எசென்ஸ்                             -  1 தேக்கரண்டி

வினிகர்/எலுமிச்சை சாறு       -  1.5 தேக்கரண்டி

விப்பிங் கிரீம்:

விப்பிங் கிரீம் தூள்             -  1/2 கப்

ஐஸ் வாட்டர்                    -  3/4 கப்,

அலங்கரிக்க

செர்ரி                              -  1/2 கப்

டார்க் சாக்லேட் பார்

சிரப்புக்கு

சர்க்கரை                         -  2 மேஜைக்கரண்டி

நீர்                                -  1/2 கப்

வெண்ணிலா                    -  1/2 டீஸ்பூன்

செய்முறை:

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

சல்லடையில் மாவை எடுத்து சலித்துக் கொள்ளவும்

பேக்கிங் பவுடர் சேர்க்கவும்

சமையல் சோடா சேர்க்கவும்

கொக்கோ தூள் சேர்க்கவும்

அதையும் சலித்துக் கொள்ளவும்

ஒரு கிண்ணத்தில்சர்க்கரை எடுத்துக் கொள்ளவும்

பால் சேர்க்கவும்

வெண்ணிலா சேர்க்கவும்

எண்ணெய் சேர்க்கவும்

சர்க்கரை கரையும் வரை நன்கு கலக்கவும்

பின்பு சலித்து வைத்துள்ள மாவு மற்றும் கொக்கோ கலவை சேர்க்கவும்

 

வினிகர் சேர்க்கவும்

நன்கு கலக்கவும்

ஒரு மைக்ரோ வேவ் பாதுகாப்பான கிண்ணத்தை எடுத்துக் கொள்ளவும்

 அதனுள் ஒரு காகிதத்தோலினை வைக்கவும்

 அதில் எண்ணெய் தடவிக் கொள்ளவும்

பக்கங்களிலும் தடவிக் கொள்ளவும்

மாவில் பாதியளவு  ஊற்றவும்

மைக்ரோவேவ்  உள்ளே வைக்கவும்

2 நிமிடங்கள் வேக வைக்கவும்

பின்பு அதனை மூடி வைக்கவும்

2 நிமிடம் கழித்து வெளியே எடுக்கவும்

அதனை ஒரு தட்டில் கவிழ்த்து வைக்கவும்

அதன் மேலிருக்கும் கோகித்த் தோலினை எடுத்துக் கொள்ளவும்

கேக் ரெடி

இப்போது விப்பிங் க்ரீம் செய்யவும்.ஒரு கிண்ணத்தில் விப்பிங் கிரீம் தூளினை எடுத்துக் கொள்ளவும்

ஐஸ் வாட்டர் ஊற்றவும்

கலவை அடர்ந்து வரும் வரை நன்கு கலக்கவும்

கிரீம் கடினமாகும் வரை வைக்கவும்

இப்போது சிரப் செய்ய சர்க்கரை எடுத்துக் கொள்ளவும்

 அரை கப் நீர் சேர்க்கவும்

வெண்ணிலா சேர்க்கவும்

நன்கு கலக்கவும்சிரப் ரெடி

இப்போது மிக்சியில் சில செர்ரிகளை எடுக்கவும்

அதை அரைத்துக் கொள்ளவும்

சாக்லேட் சுருள் செய்ய ஒரு தோலுரிக்கும் கருவியை பயன்படுத்தவும்  

பின்பு கேக்கை இரு துண்டுகளாக வெட்டவும்

ஒரு தட்டில் காகிதத்தோல் வைத்து அதன் மீது கேக்கின் ஒரு துண்டை வைக்கவும்

அதன் மீது சிரப்பை தடவவும்

சிரப்பை கேக் நன்றாக உறிஞ்சும்

பின்பு கிரீம் விட்டு கேக்கின் மேல்பகுதி முழுவதும் பரப்பவும்.அதன் மீது செர்ரி வைக்கவும்

பின்பு கேக்கின் மற்றெரு துண்டை எடுத்து அதன் மீது வைக்கவும்

பிற கேக்குகளையும் இதே போல் செய்து.நான்கு அடுக்குகள் செய்யவும்

பின்பு கேக் முழுவதும் க்ரீம் தடவவும்

 

பின்பு சாக்லேட் சுருளை க்ரீமின் மீது போடவும்

பின்பு சாக்லேட் துண்டுகளை கேக்கின் அனைத்து பக்கங்களிலும் க்ரீமில் ஒட்டி வைக்கவும்

ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்

 

.