கற்பூரவல்லி இலை பஜ்ஜி / ORGENO LEAF BHAJI

Posted in சர்க்கரை நோயாளிகளுக்கு

தேவையான பொருட்கள்

கற்பூரவல்லி இலை       –        20

தேங்காய் எண்ணெய்   –        பொரிக்க

மாவுக்கு

கடலை மாவு            –        1 கப்

மிளகாய் தூள்          –        1 தேக்கரண்டி

உப்பு                    –        தேவையான அளவு

பெருங்காயம்            –        சிறிதளவு

பேக்கிங் சோடா         –        சிறிதளவு

நீர்                      –        தேவையான அளவு

செய்முறை

கற்பூரவல்லியை எடுத்துக் கொள்ளவும்

அதனை நன்கு சுத்தம் செய்து காய வைக்கவும்

பின்பு ஒரு பாத்திரத்தில் கடலை மாவை எடுத்துக் கொள்ளவும்

அதனுடன் மிளகாய் தூள் சேர்க்கவும்

சிறிது உப்பு சேர்க்கவும்

பெருங்காயம் சேர்க்கவும்

தேவையான அளவு நீர் சேர்க்கவும்

பின்பு சிறிது பேக்கிங் சோடா சேர்க்கவும்

நன்கு கலக்கி தனியே வைக்கவும்

பின்பு கற்பூரவல்லி இலைகளை அதில் போட்டு மாவு இலை முழுவதும் படும்படி முக்கி எடுக்கவும்

பின்பு அதனை எண்ணெயில் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்துக் கொள்ளவும்

பின்பு அதனை எடுத்து பேப்பர் டவ்வலில் வைக்கவும்

 

சிறிது நேரத்திற்கு பிறகு பரிமாறவும்

Oregano Health Benefits And Minerals

.