ஓட்ஸ் சப்பாத்தி(oats chappthi)

Posted in சர்க்கரை நோயாளிகளுக்கு

தேவையான பொருட்கள்

பொடித்த ஓட்ஸ்              -              1 கப்

கோதுமை மாவு                -              3 கப்

உப்பு                                                தேவையான அளவு

தேங்காய் எண்ணெய்                சிறிதளவு

செய்முறை

ஓட்ஸினை கடாயில் போட்டு நன்றாக வறுத்துக் கொள்ளவும்.பின்பு அதனை பொடித்து வைத்துக் கொள்ளவும்

பொடித்த ஓட்ஸ் கோதுமை மாவு, உப்பு, தண்ணீர் மற்றும் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி நன்றாக பிசைந்து கொள்ளவும்.பிசைந்த மாவினை 10 நிமிடங்கள் ஊற விடவும். பிறகு  சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

பின்பு அதனை சப்பாத்திகளாக தேய்த்துக் கொள்ளவும்

பின்பு தோசை கல்லினை காய வைத்து  சப்பாத்திகளை சுடவும்

 

சுவையான ஓட்ஸ் சப்பாத்தி ரெடி

.